Relience Jio முதலில் மொபைல் சிம் கார்டுகளின் ஹோம் டெலிவரி சேவையை நிறுத்தத் தொடங்கியுள்ளது. டெலிகாம் துறையின் (DoT) ஆட்சேபனைகளைத் தொடர்ந்து நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏர்டெல் மற்றும் பிளிங்கிட் வழங்கும் ஒத்த சேவைகள் குறித்து DoT பாதுகாப்பு கேள்விகளை எழுப்பியதை அடுத்து, ஜியோ இந்த வசதியை நிறுத்தியுள்ளது.
அறிக்கையின்படி , ஜியோ ஏப்ரல் 16 அன்று DoT செயலாளர் நீரஜ் மிட்டலுக்கு ஒரு கடிதம் எழுதி, ஏப்ரல் 25 முதல் கஸ்டமர்களின் வீடுகளுக்கு சிம் கார்டுகளை பாஸ்ட் வழங்கத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தது. இந்த திட்டம் ஏர்டெல்லின் முன்முயற்சியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பயனர்களுக்கு பாஸ்ட் ஆன்போர்டிங் செயல்முறையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது .
ஏர்டெல் நிறுவனம் பிளிங்கிட் நிறுவனத்துடன் இணைந்து ரூ.49 சேவைக் கட்டணத்தில் 10 நிமிடங்களுக்குள் சிம் கார்டுகளை டெலிவரி செய்தது. இருப்பினும், கஸ்டமர் வெரிபிகேசன் முடிப்பதற்கு முன்பே சிம் டெலிவரி செய்ய DoT தலையிட்டு ஆட்சேபனை தெரிவித்தது.
இதனை தொடர்ந்து டெலிகாம் ஒப்ப்ரேட்டர் சிம் டெலிவரி செய்வதற்க்கு முன்பு ஆதார் அடிபடையிலான SELF KYC முழுமையாக முடிந்து இருக்க வேண்டும் பாதுகாப்பை பலப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அப்டேட் விதிக்குப் பிறகு, ஜியோ எக்ஸ்பிரஸ் டெலிவரி சேவையைத் தொடங்கும் திட்டத்தை நிறுத்தியது. DoT தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமா என்பதை நிறுவனம் வெளியிடவில்லை.
ஏர்டெல் தற்போது அதன் சேவையை மதிப்பாய்வு செய்து வருகிறது நிறுவனம் மீண்டும் ஹோம் சிம் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. டெலிவரிக்கு முந்தைய KYC வெரிபிகேசன் தேவைப்படுவதால் இந்த செயல்முறை அதிக நேரம் ஆகலாம். 5G சேவைகளை விரிவுபடுத்தவும் லாபத்தை அதிகரிக்கவும் பாடுபடுவதால், பாஸ்ட் சிம் கார்டு டெலிவரி புதிய பயனர்களைக் கொண்டுவர உதவும் என்று டெலிகாம் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இருப்பினும், அவர்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.
இதையும் படிங்க Realme யின் இந்த போனில் அதிரடி கூப்பன் டிஸ்கவுண்ட் வெறும் ரூ,17999 வாங்கலாம்