Jio new rs 339
Reliance Jio அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு எந்த ஒரு ஆரவாரம் இல்லாமல் புதியதாக ரூ,339 யில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த திட்டமானது நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் அனைவருக்கும் இந்த திட்டம் கிடைக்கும். இந்த புதிய ரூ,339கொண்ட திட்டம் முழுசா ஒரு மாத வேலிடிட்டியுடன் வருகிறது, ஆனால் இந்த திட்டத்தில் OTT (over-the-top) நன்மை ஏதும் கிடைக்காது அப்பொழுது இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை என்ன என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோஅதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ,339யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் நன்மை என பார்த்தால், தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மை வழங்குகிறது, ஆனால் இந்த திட்டத்தில் OTT மற்றும் அன்லிமிடெட் 5G நன்மை ஏதும் கிடைக்காது , ஏன் என்றால் OTT மற்றும் 5G நன்மையை பெற குறைந்தபட்ச 2GB டேட்டா தேவைப்படும் ஆனால் இந்த திட்டத்திலோ வெறும் 1.5GB டேட்டா மட்டுமே வழங்குகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் மற்ற நன்மைகள் என பார்த்தால் JioTV, JioTV AI Cloud ஆப் சப்க்ரிப்ஷன் போன்றவற்றை பெறலாம்.
ஜியோவின் புதிய திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இது ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டத்தின் விலை ஒரு நாள் கணக்கு போட்டால் ரூ,10.93 – ரூ,11.30 ஆக இருக்கிறது ஆனால் அந்த மாதத்தில் வரும் மொத்த நாட்கள் பொருத்து இந்த திட்டத்தின் தினசரி விலை வேறுபடலாம.
இதையும் படிங்க:சத்தமில்லாமல் அதிரடி ஷோக் கொடுத்த Jio, திடிரென இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை குறைப்பு
இந்த திட்டமானது தினமும் ஒரு கம்மி விலையில் ஒரு மாதம் வரை எந்த வித ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்க நினைத்தால் அவர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் அதாவது இந்த திட்டத்தில் வரும் மிக பெரிய நன்மை வெறும் ரூ,339 யில் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை பெறலாம். இதை தவிர நீங்கள் இதை விட குறைந்த விலை திட்டத்தை பெற விரும்பினாள் ஜியோவின் ரூ,319 கொண்ட திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யலாம் இந்த திட்டத்திலும் அதே நன்மையை வழங்குகிறது