Jio Network down: Relience Jio செவ்வாயன்று, பல இடங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் பெரும் நெட்வொர்க் செயலிழப்பை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. பல கஸ்டமர்கள் கால்கள் செய்யவோ அல்லது மொபைல் இன்டர்நெட் அணுகவோ முடியவில்லை. டவுன்டெக்டரின் கூற்றுப்படி, 6,500 க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டன, 68% பேர் சிக்னல் இல்லை என்றும், 16% பேர் மொபைல் டேட்டா சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்,
இதையும் படிங்க:BSNL 4G மற்றும் Q-5G சேவை நாடு முழுவதும் அனைவருக்கும் வந்தாச்சு கூடவே வீடு தேடி சிம் டெலிவரி ஆகும்
Reliance Jio கஸ்டமர்கள் தொடர்ந்து அதன் சோசியல் மீடியா பக்கமான X(ட்விட்டர் பக்கத்தில்) சரியாக பேச்சு குரல் சரியாக கேட்கவில்லை என தொடர்ந்து பல புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது இதில் பலர் அவர்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
“ஜியோ ஒரு பெரிய செயலிழப்பை எதிர்கொள்கிறது, மிகவும் ஏமாற்றமளிக்கும் அனுபவம். மேற்கு வங்கம், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் பீகாரிலும் ஜியோ சேவைகள் முற்றிலுமாக முடங்கியிருப்பதைக் கண்டுபிடித்தேன். நெட்வொர்க் முற்றிலும் இல்லை. ஜியோ குழு, தயவுசெய்து இந்த சிக்கலை விரைவில் சரிசெய்யவும்,” என்று ஒரு பயனர் X யில் எழுதினார்.
#Jionetwork down… மேலும் சிலர் நெட்வொர்க் பிரச்சனை என தெரியமால் பல முறை போனை ரீஸ்டார்ட் செய்ததாக கூறியிருந்தார்.