Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனங்களில் ஒன்றாகும் இது தற்பொழுது அதன் கஸ்டமர்களுக்கு ஐந்து புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இது கேமரகளுக்கு சிறப்பக இருக்கும், இந்த கேமிங் திட்டமானது அதிகபட்சமான JioGames Cloud நன்மை இலவசமாக வழங்கும் இதன் மூலம் பயனர்களை ப்ரீமியம் கேம் , PC, Jio STB, மற்றும் ஸ்மார்ட்போன் போன்றவற்றில் விளையாட முடியும் மேலும் இதன் மூலம் கேமிங் அதிகரிக்க விரும்புகிறது இந்த திட்டத்தின் jiogame திட்டத்தின் ஆரம்பவிலை ரூ,48 ஆகும் இதை தவிர ரூ,98 ,ரூ,298ரூ,495 மற்றும் ரூ,545 ஆகும் இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.
ஜியோ அதன் கஸ்டமர்களுக்கு புதிய கேமிங் கேட்டகரி அறிவித்துள்ளது, மேலும் இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் jioகேம்ஸ் நன்மை போஸ்ட்பெயிட் மற்றும் பரோட்பேன்ட் பயனர்களுக்கு கிடைக்காது
Jio ரூ,48 ப்ரீபெய்ட் திட்டம்: ரூ,48 ப்ரீபெய்ட் திட்டம் 10MB டேட்டாவுடன் வருகிறது, மேலும் 3 நாட்கள் ஜியோ கேம்ஸ் கிளவுட் அக்சஸ் வழங்குகிறது. திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலமும் 3 நாட்கள் மட்டுமே. (இது ஒரு டேட்டா வவுச்சர் என்பதை நினைவில் கொள்ளவும், இதைப் பயன்படுத்துவதற்கு ஒரு அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் செயலில் இருக்க வேண்டும்.)
Jio ரூ,98 கொண்ட திட்டம்: ஜியோவின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம் 7 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்கும் , மேலும் ஏழு நாட்கள் ஜியோ கேம்ஸ் கிளவுட் மற்றும் 10MB டேட்டாவை வழங்குகிறது. (இது ஒரு டேட்டா வவுச்சர் என்பதை நினைவில் கொள்ளவும், இதைப் பயன்படுத்துவதற்கு ஒரு அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் தேவைப்படும்.)
Jio ரூ,298 ப்ரீபெய்ட் திட்டம்: ஜியோவின் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி மற்றும் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் ஜியோ கேம்ஸ் கிளவுட் சந்தா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. (இது ஒரு டேட்டா வவுச்சர் என்பதை நினைவில் கொள்ளவும், இதைப் பயன்படுத்துவதற்கு ஒரு அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் தேவைப்படும்.)
Jio ரூ,495 ப்ரீபெய்ட் திட்டம்:: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.495 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது . இந்த திட்டத்தின் நன்மைகளில் தினமும் 1.5 ஜிபி டேட்டா + 5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் 28 நாட்களுக்கு ஜியோ கேம்ஸ் கிளவுட், ஜியோஅன்லிமிடெட் சலுகையின் கீழ் இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, 28 நாட்களுக்கு ஃபேன்கோட் சந்தா மற்றும் ஜியோடிவி, ஜியோஏஐகிளவுட் ஆகியவை வழங்குகிறது.
Jio ரூ,545 ப்ரீபெய்ட் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ ரூ.545 ப்ரீபெய்ட் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.545 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி . இந்தத் திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. 5 ஜிபி போனஸ் டேட்டாவும் கிடைக்கிறது. இந்தத் திட்டம் ஜியோஅன்லிமிடெட் சலுகையின் கீழ் இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, 28 நாட்களுக்கு ஃபேன்கோட், 28 நாட்களுக்கு ஜியோ கேம்ஸ் கிளவுட் மற்றும் ஜியோடிவி, ஜியோஏஐகிளவுட் ஆகியவற்றை வழங்குகிறது. இந்தத் திட்டத்துடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இணைக்கப்பட்டுள்ளது.பிராட்பேண்ட் பேக்கள் 5G நெட்வொர்க் ஆகியவை வழங்குகிறது.
இதையும் படிங்க Airtel யின் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் 189 நாடுகளுக்கு வழங்கும் இண்டர்நேசனல் ரோமிங் நன்மை