jio unlimited calling
தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,450க்குள் ரீச்சார்ஜ் செய்தால் முழுசா 3 மாதம் வேலிடிட்டியை வழங்குகிறது அதாவது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கிறது ஆனால் இந்த திட்டத்தில் இருக்கும் மெயின் ட்விஸ்ட் இதில் டேட்டா நன்மை கிடைக்காது இந்த திட்டத்தின் விலை ரூ,448 ஆகும் மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் மற்றும் இது யாருக்கு பயன்படும் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,448 ஆகும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை என பார்த்தால் இதில் அன்லிமிடெட் காலிங் நன்மையின் கீழ் இதில் லோக்கல், STD மற்றும் ரோமிங் கால்கள் அடங்கும் மேலும் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 1000 SMS வழங்கப்படுகிறது.
ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை ஏதும் இருக்காது, அதாவது இந்த திட்டம் முழுக்க முழுக்க காலிங் திட்டமாகும், இதை தவிர இந்த திட்டத்தில் கிடைக்கும் OTT நன்மையை பற்றி பேசினால் JioTV மற்றும் JioAICloud சேவை அடங்கியுள்ளது இதை எந்த லிமிட்டுமின்றி பற்றலாம்.
இதையும் படிங்க:VI யின் பெஸ்ட் ரூ,200 யில் அன்லிமிடெட் காலிங் நன்மை உடன் நமக்கு பிடித்தவர்களிடம் மணி கணக்கா பேசலாம்
அதாவது இந்த திட்டம் குறைந்த விலையில் ஒரு 3 மாதங்கள் வரை ரீச்சார்ஜ் தொல்லை இல்லாமல் இருக்க விரும்பும் கஸ்டமருக்கு இது சிறந்தாக இருக்கும் அதாவது உங்களுக்கு டேட்டா தேவை இல்லை காலிங் போதுமானது என நினைத்தாலோ அல்லது நீங்கள் செகண்டரி சிம்மை Jio சிம் பயன்படுத்தி வந்தாலோ வெறும் காலிங் மற்றும்SMS நன்மையை விரும்பினால் அவர்களுக்கு இந்த திட்டம் பெச்ட்டனது மேலும் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால் MyJio ஆப் அல்லது அதிகாரபூர்வ வெப்சைட்டில் Value செக்ஷனில் சென்றால் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்