BSNL பக்கா மாஸ் பிளான் ரூ,1க்கு 1GB டேட்டா நன்மை 60 நாட்களுக்கு டேட்டா டென்சன் இல்லை

Updated on 20-May-2025

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு 251ரூபாயில் கொண்டு வந்துள்ளது ரூ.251 என்ற இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஏராளமான டேட்டாவுடன் வருகிறது. இது ஒரு டேட்டா வவுச்சர் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த திட்டத்துடன் பயனர்கள் எந்த சேவை செல்லுபடியையும் பெற மாட்டார்கள். BSNL இன் ரூ.251 டேட்டா வவுச்சர், IPL (இந்தியன் பிரீமியர் லீக்) 2025 பாக்ஸில் மற்றும் பிற விஷயங்களை தங்கள் போனில் ஸ்ட்ரீம் செய்ய அதிக மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துபவர்களை மையமாகக் கொண்டுள்ளது.

BSNL ரூ,251 டேட்டா வவுச்சர் நன்மை

BSNL ரூ,251 வரும் திட்டத்தை பற்றி பேசினால் BSNL-இன் ரூ.251 டேட்டா வவுச்சர் 251GB நியாயமான பயன்பாட்டுக் பாலிசி படி (FUP) டேட்டாவுடன் வருகிறது. பயனர் அடிப்படை செயலில் உள்ள ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டிருந்தால் மட்டுமே FUP டேட்டா கிடைக்கும். ஏற்கனவே சேவை வேலிடிட்டி திட்டம் இல்லாமல், இந்தத் திட்டம் வேலை செய்யாது. BSNL-யின் ரூ.251 டேட்டா வவுச்சரின் வேலிடிட்டி காலம் 60 நாட்கள் என்பதை நினைவில் கொள்ளவும். இந்தத் திட்டம் அதிக டேட்டா பயனர்களுக்குப் பொருந்தும்.

BSNL யின் இந்த திட்டமானது இதில் ரூ,1க்கு 1GB டேட்டா வழங்கப்படுகிறது இந்த திட்டமானது பிஎஸ்என்எல் யின் மிகவும் குறைந்த விலை திட்டமாகும், இப்போது பிஎஸ்என்எல் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1 லட்சம் 4ஜி டவர்கள் பயன்படுத்துவதற்கு மிக அருகில் உள்ளது. இது டெலிகாம் நிறுவனத்திடமிருந்து இந்தத் திட்டத்தைப் பெறுபவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கக்கூடும்.

BSNL ரூ,299 யில் வரும் திட்டத்தின் நன்மை

BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,290 யில் வருகிறது, இதில் கஸ்டமர்களுக்கு முழு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம், 30 நாட்களுக்கும் அன்லிமிடெட் காலிங் வசதியைப் பெறுவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் 3 ஜிபி அதிவேக இணையத்தையும் பயன்படுத்த முடியும். இந்த வழியில், பிஎஸ்என்எல் ரூ.299 திட்டத்தில் 90 ஜிபி டேட்டாவை வழங்குகிறது . டேட்டா நுகர்வு மிக அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த திட்டம் சிறந்தது. இந்த திட்டத்தில், பயனர் 30 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் பெறுவார்.

இதையும் படிங்க:Airtel யின் ரூ,50க்கும் குறைந்த விலையில் டேட்டா திட்டம் 1 நாட்கள் வேலிடிட்டி உடன் செம்மைய என்ஜாய் பண்ணலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :