BSNL யின்சூப்பர் பிளான் ரூ,215 யில் 60GB டேட்டா,அன்லிமிடெட் காலிங், முழுசா 1 மாதம் வேலிடிட்டி

Updated on 18-Jan-2025

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார நிகம் லிமிடெட் (BSNL) மிக சிறந்த திட்டத்தில் இது தான் முதல் இடம், கடந்த காலங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் கட்டணங்களை விலை உயர்ந்ததாக மாற்றிய பிறகு, மொபைல் பயனர்கள் முன்னுரிமையில் BSNL ஐ தேர்வு செய்கிறார்கள். அதன் பயனர்களின் வசதியை மனதில் கொண்டு, BSNL குறைந்த விலை ரீசார்ஜ்களுடன் வருகிறது, மேலும் இது தொடர்பாக ரூ, 215 புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் திட்டத்தின் நன்மை என்ன பார்க்கலாம் வாங்க

BSNL ரூ,215 திட்டத்தில் நன்மை என்ன ?

பிஎஸ்என்எல்லின் ரூ.215 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, ஜியோ மற்றும் ஏர்டெல் மாதாந்திர திட்டங்கள் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும்போது, ​​BSNL யின் 30 நாட்கள் திட்டம் மொபைல் கஸ்டமர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குகிறது., இந்த 30 நாட்கள் வேலிடிட்டி திட்டம் உண்மையிலேயே மாதாந்திர ரீசார்ஜ் திட்டமாகும்.

ரூ,15 பிஎஸ்என்எல் திட்டத்தில், நிறுவனம் தினமும் 2 ஜிபி இன்டர்நெட் டேட்டாவை வழங்குகிறது. தினசரி 2ஜிபி டேட்டாவின்படி, மொத்தத் திட்டத்திலும் கஸ்டமர்களுக்கு மொத்தம் 60ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது . சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மொபைல் கஸ்டமர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி கிடைக்கும், மறுபுறம், நாள் 2 ஜிபி தீர்ந்த பிறகும், மக்கள் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போனின் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும். இதை தவிர இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் நன்மை வழங்கும்.

நாடு முழுவதும் உள்ள எந்த மாநிலத்திலும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் இந்த அன்லிமிடெட் காலிங் முற்றிலும் இலவசம். அன்லிமிடெட் காலிங்குடன் , கஸ்டமர்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும், மேலும் இவை இலவசமாகவும் பயன்படுத்தப்படலாம்.பிஎஸ்என்எல்லின் ரூ.215 திட்டத்தில் games, podcasts மற்றும் music வசதியும் கிடைக்கும். பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் ஹார்டி கேம்ஸ், சேலஞ்சர் அரீனா கேம்ஸ், கேமோன் போன்ற மொபைல் கேம்களை விளையாட முடியும். ஜிங் மியூசிக், வாவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்களில் நீங்கள் மியூசிக்கை ரசிக்க முடியும். Astrocell, Gameium, Lystn Podcast ஆகியவற்றில் பாட்காஸ்ட்களைக் கேட்க முடியும்.

BSNL சூப்பர் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் 600GB டேட்டா,அன்லிமிடெட் காலிங் மற்றும் பல நன்மை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :