BSNL Quantum 5G FWA Service launched
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் Quantum 5G FWA (Fixed Wireless Access) சேவையை ஹைதராபாதில் அறிமுகம் செய்தது. நிறுவனம் சமிபத்தில் அதன் 5G சேவையை Q-5G என்ற பெயரில் கொண்டு வந்தது அதாவது அதன் முழு விருவக்கம் குவாண்டம் 5G ஆகும். இப்பொழுது நிறுவனம் அதன் soft சேவையை ஹைதராபாத்தில் அறிமுகம் செய்தது இது ஹைதராபாத்தில் மட்டுமல்லாமல் ஒரு சில தேர்டுக்கப்பட்ட நகரங்களில் லைவ் செய்யப்பட்டுள்ளது மேலும் இதன் தகவலை பார்க்கலாம் வாங்க.
ஜூன் 19, 2025, பிஎஸ்என்எல் அதன் BSNL Q-5G FWA ஹைதராபாத்தில் அறிமுகம் செய்தது. வோடபோன் ஐடியா FWA சேவையை கொண்டு வரவில்லை ஆனால் BSNL அதன் soft சேவையை அறிமுகம் செய்துள்ளது மேலும் எதிர்காலத்தில் மிக சிறந்த கனெக்டிவிட்டி கிடைப்பதே இதன் நோக்கம்.
முன்னர் ட்விட்டராக இருந்த BSNL, X யில் ஒரு சோசியல் பதிவில், “ஸ்ரீ ஏ. ராபர்ட் ஜே. ரவி, @CMDBSNL, ஹைதராபாத்தில் புரட்சிகரமான BSNL குவாண்டம் 5G FWA (Fixed Wireless Access) soft சேவையை அறிமுகப்படுத்தினார். இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் வசிக்கிறார். BSNL Q-5G FWA உடன் மின்னல் வேக இண்டர்நெட்டை அனுபவிக்கவும்” என்று கூறியது.5G-இயக்கப்பட்ட
தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர், பிஎஸ்என்எல்லின் 1 லட்சம் டவர்களை நிறுவுவது குறித்துப் பேசியிருந்தார். 4ஜி சேவைகளை மேலும் மேம்படுத்துவதே அரசு நிறுவனத்தின் நோக்கம் என்று அவர் கூறியிருந்தார். பிஎஸ்என்எல்லின் நிதி நிலையை மேம்படுத்த 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியிருந்தார். நிறுவனத்தின் 4ஜி சேவைகள் முற்றிலும் உள்நாட்டு அமைப்பை அடிப்படையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இன்னும் 1 லட்சம் டவர்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்னும் காத்திருக்கிறது.
BSNL 5G அறிமுகம் குறித்த செய்திகள் பல மாதங்களாக வெளிவந்து வருகின்றன. இந்த சேவைக்கு பெயரிடுமாறு நிறுவனமே மக்களிடம் கேட்ட முதல் முன்னேற்றம் இதுவாகும். சில மாதங்களுக்கு முன்பு BSNL 5G ஜூன் மாதத்தில் தொடங்கப்படலாம் என்று கூறப்பட்டது. இப்போது இந்த மாதம் வந்த புதிய தகவல்களால், வரும் காலத்தில் அரசாங்கத்தால் சில பெரிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. இருப்பினும், BSNL தனது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் ஏமாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதன் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகின்றனர், மேலும் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை 9 கோடிக்கும் குறைவாகவே உள்ளது. BSNL போலவே, VI இன் கஸ்டமர்கள் குறைந்துள்ளனர்.