BSNL யின் இலவச ஆபர் ப்ராண்ட்பேண்ட் கனேக்சனுடன் இலவசமாக கிடைக்கும் ONT ரவுட்டர்.

Updated on 06-Oct-2022
HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) மக்களுக்காக ஒரு சிறந்த ஆஃபரை வழங்கியுள்ளது.

ங்கிள் பேண்ட் ONT ரூட்டர் மற்றும் டூயல் பேண்ட் ONT ரூட்டர் ஆகியவை கஸ்டமர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

BSNL இன் பைபர் இன்டெர்நெட் கனெக்ஷன் எடுக்க திட்டமிட்டிருந்தால் மற்றும் மெசேஜ்களை கவனமாக படிக்கவும்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) மக்களுக்காக ஒரு சிறந்த ஆஃபரை வழங்கியுள்ளது. பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு ONT ரூட்டரை இலவசமாக வழங்குகிறது. சிங்கிள் பேண்ட் ONT ரூட்டர் மற்றும் டூயல் பேண்ட் ONT ரூட்டர் ஆகியவை கஸ்டமர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ONT ரவுட்டர்களுக்கு டெபாசிட் தேவையில்லை என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. மேலும் இன்ஸ்டால் சார்ஜ் இருக்காது. இருப்பினும், இந்த ரவுட்டர்களை இலவசமாகப் பெற, சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் BSNL இன் பைபர் இன்டெர்நெட்  கனெக்ஷன் எடுக்க திட்டமிட்டிருந்தால் மற்றும் மெசேஜ்களை கவனமாக படிக்கவும்.

BSNL வெப்சைடில் காட்டப்பட்டுள்ள தகவலின்படி, கம்பெனியின் ரூ.599, ரூ.799, ரூ.999 அல்லது ரூ.1499 இன்டர்நெட் பிளான்களில் சப்கிறைபேர் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு சிங்கள் பேண்ட் ONT ரௌட்டர் பெறுவார். அதாவது, நீங்கள் எடுக்கும் பிளானிற்கு, குறைந்தது 6 மாதங்கள் ஒன்றாகச் செலுத்த வேண்டும். தகவலின்படி, டெபாசிட் தேவையில்லை, இன்ஸ்டால் சார்ஜ் வசூலிக்கப்படாது.

நீங்கள் டூயல் பேண்ட் ONT ரூட்டரை இலவசமாகப் பெற விரும்பினால், குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு அதாவது ஒரு வருடத்திற்கு ரூ.599, ரூ.799, ரூ.999 அல்லது ரூ.1499க்கு ஏதேனும் ஒரு பிளானை நீங்கள் வாங்க வேண்டும். இந்த பிளானின் டெபாசிட் அல்லது இன்ஸ்டால் சார்ஜ் எதுவும் இல்லை.

BSNL இன் ரூ.599 பேக்கேஜ் பற்றி பேசுங்கள், இதில் கஸ்டமர்களுக்கு ஒரு மாதத்திற்கு 60 Mbps ஸ்பீடில் 3.3 TB FUP டேட்டா வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், 100 Mbps ஸ்பீட் மற்றும் 3.3TB டேட்டா ஒவ்வொரு மாதமும் ரூ.799 இன் இன்டர்நெட் பிளானில் கிடைக்கும். BSNL இன் ரூ.999 பிளானில், பைபர் பிரீமியம் 999 என்றும் அழைக்கப்படுகிறது, யூசர்கள் 150 Mbps ஸ்பீடில் 2TB டேட்டாவைப் பெறுகிறார்கள்.

கம்பெனியின் ரூ.1499 பிளான் 3.3TB டேட்டா மற்றும் 200 Mbps ஸ்பீடில் அன்லிமிடெட் லேண்ட்லைன் கால்களை வழங்குகிறது. இந்தத் பிளான் பாரத் ஃபைபர் அல்ட்ரா பேக்கேஜ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் பிளான்களின் விலைகளில் ஜிஎஸ்டி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். Disney+ Hotstar பிரீமியம் மெம்பர்ஷிப் ரூ.999 மற்றும் ரூ.1,499 பிளான்களுடன் வழங்கப்படுகிறது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :