நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த BSNL 5G சேவை வந்தாச்சு Q 5G என பெயர் இருக்கும்

Updated on 18-Jun-2025
HIGHLIGHTS

BSNL அதன் 5G-ன் பெயரை அறிவித்துள்ளது.

BSNL அவர்களின் 5G BSNL Q-5G . என்பது குவாண்டம் 5G அழைக்கப்படும் என்று கூறியது

BSNL யின் 5G சேவைக்கு பெயரிட்டதற்கு நன்றி தெரிவித்தது

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் 5G சேவையின் பெயரை அதிகராபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கொண்டுவதுள்ளது. BSNL அதன் 5G-ன் பெயரை அறிவித்துள்ளது. X யில் பதிவிட்டு, BSNL அவர்களின் 5G BSNL Q-5G என்று அழைக்கப்படும் என்று கூறியது. இங்கே Q5G என்பது குவாண்டம் 5G. BSNL அதன் வரவிருக்கும் 5G சேவைக்கான பெயர்களை பரிந்துரைக்குமாறு மக்களிடம் கேட்டது. BSNL தனது பதிவில் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து, BSNL யின் 5G சேவைக்கு பெயரிட்டதற்கு நன்றி தெரிவித்தது. BSNL “நாங்கள் ஒன்றாக ஒரு சேவையை மட்டும் தொடங்கவில்லை, ஆனால் வரலாற்றை எழுதியுள்ளோம்” என்று கூறியுள்ளது.

Quantum 5G FWA அதன் தேர்டுக்கப்பட்ட வட்டாரங்களில் தொடங்கப்பட்டது

மேலும் இதன் மற்றொரு அக்கவுன்ட் BSNL UP East BSNL Quantum 5G FWA அறிவித்தைதை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது, மாண்புமிகு CMD BSNL, இயக்குநர்கள் குழு மற்றும் அனைத்து CGM களின் மதிப்பிற்குரிய முன்னிலையில் புரட்சிகரமான BSNL Quantum 5G FWA (Fixed Wireless Access) சேவையை துவக்கியதன் மூலம் இன்று ஒரு வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது” என்று BSNL UP East அக்கவுண்டில் (சரிபார்க்கப்படாதது) ஜூன் 18 அன்று X யில் பகிர்ந்தது.

மேலும் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி FWA சேவை இன்டர்நெட் 5G FWA ஒரு குத்தகை சேவையாகும் இந்த சேவையானது ஒரு சில தேர்டுக்கப்பட்ட வட்டாரங்களில் ரூ,999 யில் ஆரம்பமாகும் ஹை ஸ்பீட் டேட்டா நன்மை பெறலாம்

BSNL 5G சேவையால் நன்மை இருக்குமா ?

சமீபத்தில், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில், தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர், பிஎஸ்என்எல்லின் 1 லட்சம் டவர்கள் இன்ஸ்டால் செய்ததை குறித்துப் பேசியிருந்தார். 4ஜி சேவைகளை மேலும் மேம்படுத்துவதே அரசு நிறுவனத்தின் நோக்கம் என்று அவர் கூறியிருந்தார். பிஎஸ்என்எல்லின் நிதி நிலையை மேம்படுத்த 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியிருந்தார். நிறுவனத்தின் 4ஜி சேவைகள் முற்றிலும் உள்நாட்டு அமைப்பை அடிப்படையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இன்னும் 1 லட்சம் டவர்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்னும் காத்திருக்கிறது.

இதையும் படிங்க:Vodafone Idea யின் திட்டத்தில் Amazon Prime இலவசம் கூடவே பல நன்மை, தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் நன்மை

BSNL யின் ஹை ஸ்பீட் 5G சேவை எப்பொழுது கிடைக்கும் ?

BSNL யின் 5G யின் அறிமுகத்தை பற்றி பல மாதங்களாக வதந்தி வந்த நிலையில் தற்பொழுது முதல் முறையாக 5G தேவலப்பை பார்க்க முடிகிறது, சில மாதங்களுக்கு முன்பு 5G சேவையை ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என கூறி இருந்தது அதனை தொடர்ந்து விரைவில் 5G சேவையை அனைத்து வட்டாரங்களுக்கும் கொண்டு செல்லும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :