அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது
அதன் 'Swadeshi' 4G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகத் தெரிகிறது
BSNL புதிய ரூ.225 திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது
அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஏற்கனவே உள்ள திட்டங்களை திருத்தி, அதன் ‘Swadeshi’ 4G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகத் தெரிகிறது. சமீபத்தில் சில BSNL திட்டங்களில் மாற்றங்களைக் கண்டோம், இப்போது அந்த நிறுவனம் ஏற்கனவே உள்ள ரூ.228 மற்றும் ரூ.199 ரீசார்ஜ் வவுச்சர்களுடன் புதிய ரூ.225 திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது இதன் நன்மை மற்றும் ஸ்வதேசி பற்றி பார்க்கலாம் வாங்க
BSNL ரூ,225 ப்ரீபெய்ட் திட்டம்
BSNL ரூ.225 திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள் , தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது அதன் பிறகு 40 Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியாகும்.
BSNL மற்ற திட்டம்
BSNL ரூ.229: இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா (அதன்பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைக்கப்பட்டது), அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 1 மாதம் இருக்கிறது..
BSNL ரூ.228: இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா (அதன்பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைக்கப்பட்டது), அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 1 மாதம் இருக்கிறது..
BSNLரூ.199: இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், மற்றும் தினமும் 100 SMS 28 நாட்கள் வேலிடிட்டியாகும் .
BSNL வரலாற்றில் மற்றொரு சிறப்பு நாள் நெருங்கி வருகிறது. BSNL இன் 4G நெட்வொர்க் சனிக்கிழமை தொடங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி BSNL இன் 4G ஸ்டேக்கைத் தொடங்குவார், இது நாடு முழுவதும் 98 ஆயிரம் தளங்களில் அறிமுகப்படுத்தப்படும். BSNL 4G முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் இதுவும் சிறப்பு வாய்ந்தது. இப்போது இந்தியா 4G தொடர்பான மென்பொருள் மற்றும் வன்பொருளை சொந்தமாக தயாரித்து வழங்கக்கூடிய உலகின் ஐந்தாவது நாடாக மாறும். சேவை தொடங்கப்பட்டவுடன், இந்தியாவின் அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் 4G உடன் பொருத்தப்பட்டிருப்பார்கள். BSNL யின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரதமர் சனிக்கிழமை இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகளை அறிமுகப்படுத்துவார். நாடு தழுவிய BSNL 4G சேவை நாளை 98 ஆயிரம் தளங்களில் வழங்கப்படும் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.