BSNL . நிறுவனம் ரூ. 45 விலையில் முதல் ரீசார்ஜ் கூப்பன் (first recharge coupon) சலுகையை அறிவித்து இருக்கிறது. இது விளம்பர நோக்கில் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு 10 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 249 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இது 60 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
45 நாட்கள் வேலிடிட்டி நிறைவுற்றதும், பயனர்கள் தற்போது வழங்கப்படும் இதர சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். புதிய அறிமுக சலுகை ஆகஸ்ட் 6 வரை வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். அறிவித்து இருக்கிறது. இதுதவிர ஜூலை 31 ஆம் தேதி வரை இலவச சிம் சலுகையை பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது.