அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ஹோலி சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது, இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்கள் குறைந்த விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதே போலோ சமிமபத்தில் பிஎஸ்என்எல் அதன் கஸ்டமர்களுக்கு 425 நாட்கள் வழங்கும் வேலிடிட்டி திட்டத்தை கொண்டு வந்தது அதனை தொடர்ந்து இப்பொழுது புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது 365 நாள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டத்தின் நன்மை என்ன முழுசா பார்க்கலாம் வாங்க.
ஹோலி தமக்கா சலுகையை அறிவித்து, நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான நீண்ட கால திட்டத்தில் கூடுதலாக 29 நாட்கள் வேலிடிட்டி சேர்த்துள்ளது. இதன் விலை ரூ,1,499 திட்டத்தில் இப்போது 365 நாட்கள் வேலிடிட்டியாகும், முன்பு இது 336 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்கியது. சிறப்பு என்னவென்றால், இந்த கூடுதல் வேலிடிட்டி காலத்திற்கு கஸ்டமர் எந்த கூடுதல் கட்டணங்களையும் செலுத்த வேண்டியதில்லை. இது தவிர, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் அன்லிமிடெட் டேட்டா வசதியும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு சலுகையை BSNL அதன் அதிகாரப்பூர்வ X (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த ஹோலி தமாக்க சலுகை, நீண்ட வேலிடிட்டி காலம் மற்றும் சிறந்த டேட்டா நன்மைகளுடன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் சேவைகளை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்களும் ஒரு BSNL பயனராக இருந்தால், இந்த அற்புதமான சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு.
இதையும் படிங்க : வேற லெவல் BSNL யின் ஸ்பெஷல் Holi ஆபர் 425 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா நன்மை