BSNL
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ஸ்பெஷல் ஹோலி சலுகையை அறிவித்துள்ளது, இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு மொத்தம் 425 நாட்களுக்கு வெளிடிட்டு உடன் இதில் பல நன்மையை வழங்குகிறது.
இந்த சலுகை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் மூலம் அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் மேலும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது, இது பண்டிகை காலத்தில் தனது கஸ்டமர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும். சமீபத்தில், பிஎஸ்என்எல் அதன் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளித்துள்ளது.
பிஎஸ்என்எல் அதன் ரூ.2,399 ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியை சேர்த்துள்ளது. முன்னதாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 395 நாட்களாக இருந்தது, இப்போது அது 425 நாட்களாக அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தில், இந்தியா முழுவதும் அன்லிமிடெட் காலிங் வசதி வழங்கப்படுகிறது. கூடுதலாக, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள MTNL நெட்வொர்க்கிலும் இலவச காலிங்கின் நன்மை கிடைக்கும்.
இந்த திட்டத்தில், கஸ்டமர்களுக்கு தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். இது முழு திட்ட காலத்திற்கும் மொத்தம் 850 ஜிபி தரவைச் சேர்க்கிறது. இது தவிர, BSNL இந்த திட்டத்துடன் BiTV-யின் இலவச சந்தா மற்றும் சில OTT ஆப்களுக்கான அக்சஸ் வழங்குகிறது.
ரீச்சார்ஜ் செய்ய இதை க்ளிக் செய்யுங்க
பிஎஸ்என்எல் குறைந்த விலை திட்டங்களை வழங்குவது மட்டுமல்லாமல், அதன் நெட்வொர்க் கன்டென்ட் வலுப்படுத்துகிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியா முழுவதும் 1 லட்சம் புதிய 4G மொபைல் டவர்களை இன்ஸ்டால் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு, பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 65,000க்கும் மேற்பட்ட 4ஜி மொபைல் டவர்களை நிறுவியிருந்தது. மீதமுள்ள டவர்களை வரும் மாதங்களில் செயல்படும், கஸ்டமர்களுக்கு சிறந்த நெட்வொர்க் கனேக்சனை வழங்கும்.
இதையும் படிங்க BSNL யின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் டேட்டாவுக்கு பஞ்சமே இல்லை