BSNL யின் பக்கமாஸ் பிளான் 90GB டேட்டா உடன் 180 நாட்களுக்கு நோ டென்சன்

Updated on 23-May-2025

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தனது கச்டமர்களுக்காக அறையாண்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு முழுசா 180 நாட்கள் வேலிடிட்டியுடன் இதில் அதிகபட்ச டேட்டா நன்மையுடன் காலிங்,SMS போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் ஒரு நீண்ட நாட்களா வரை டேட்டா காலிங் டென்சன் இல்லமல் இருக்க வேண்டும் என நினைத்தால் இந்த திட்டம் உங்களுக்கு சரியானதாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பீர்க்கலம் வாங்க.

BSNL ரூ,897 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.

BSNL-இன் ரூ.897 திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 90GB டேட்டாவுடன் வருகிறது. FUP (fair usage policy) டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைகிறது. இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. இது இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றாகும், இது அரை ஆண்டு செல்லுபடியாகும்.

பிஎஸ்என்எல் ஏற்கனவே இந்தியாவில் எல்லா இடங்களிலும் 4ஜி சேவையை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 1 லட்சம் 4ஜி தளங்கள் என்ற இலக்கை அடைய இந்த டெலிகாம் நிறுவனம் மிக அருகில் உள்ளது. 4ஜி மற்றும் இது போன்ற கட்டணங்களுடன், பிஎஸ்என்எல் நிச்சயமாக செகண்டரி சிம் கார்டாக வைத்திருக்க ஒரு சிறந்த தேர்வாக மாறும்.

BSNL ரூ,251 டேட்டா வவுச்சர் நன்மை

BSNL ரூ,251 வரும் திட்டத்தை பற்றி பேசினால் BSNL-இன் ரூ.251 டேட்டா வவுச்சர் 251GB நியாயமான பயன்பாட்டுக் பாலிசி படி (FUP) டேட்டாவுடன் வருகிறது. பயனர் அடிப்படை செயலில் உள்ள ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டிருந்தால் மட்டுமே FUP டேட்டா கிடைக்கும். ஏற்கனவே சேவை வேலிடிட்டி திட்டம் இல்லாமல், இந்தத் திட்டம் வேலை செய்யாது. BSNL-யின் ரூ.251 டேட்டா வவுச்சரின் வேலிடிட்டி காலம் 60 நாட்கள் என்பதை நினைவில் கொள்ளவும். இந்தத் திட்டம் அதிக டேட்டா பயனர்களுக்குப் பொருந்தும்.

இதையும் படிங்க BSNL பக்கா மாஸ் பிளான் ரூ,1க்கு 1GB டேட்டா நன்மை 60 நாட்களுக்கு டேட்டா டென்சன் இல்லை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :