BSNL independance day plan
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு மிக சிறந்த சலுகையை அறிவித்துள்ளது, இந்த சிறப்பு சலுகையின் கீழ் எக்ஸ்ட்ரா போனஸ் வேலிடிட்டியை அறிவித்தது அதாவது இந்த திட்டத்தில் இப்பொழுது முன்பை விட 47 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியை வழங்குகிறது இந்த திட்டத்தில் இப்பொழுது ஆகா மொத்தம் 412 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
This Independence Day, give yourself the freedom from frequent recharges.
— BSNL India (@BSNLCorporate) August 13, 2026
Get 412 days of BSNL connectivity with one recharge, including 47 extra days beyond a year.
Recharge smart via #BReX 👉 https://t.co/SpaVXw85OI#BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife… pic.twitter.com/qGtt7WkKxS
பிஎஸ்என்எல் இந்த வருடாந்திர திட்டத்தை சில மாதங்களுக்கு முன்புதான் அறிமுகப்படுத்தியது. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் பலன்களில் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இலவச தேசிய ரோமிங் ஆகியவை அடங்கும். ரூ,2,399 விலையுள்ள இந்தத் திட்டம், தினசரி 2GB அதிவேக டேட்டா மற்றும் 100 இலவச SMS மெசேஜ்களை வழங்குகிறது. கூடுதல் வேலிடிட்டி காலத்துடன், கஸ்டமர்களுக்கு இப்போது இந்தத் திட்டத்தின் அனைத்துப் பலன்களையும் 412 நாட்களுக்குப் பெற முடியும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி செப்டம்பர் 12 வரை மட்டுமே இருக்கும்
இதையும் படிங்க:அரசின் அதிரடி BSNL சூப்பர் சுதந்திர சலுகை அறிவிப்பு 5000GB டேட்டா உடன் அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை
பிஎஸ்என்எல் நிறுவனமும் 5ஜி சேவைகளைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இந்த அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனத்தின் புதிய 4ஜி மொபைல் கோபுரங்கள் 5ஜி சேவைக்குத் தயாராக உள்ளன. இதனால், 5ஜி சேவைகள் தொடங்கப்பட்ட உடனேயே மக்கள் அதன் மூலம் பயனடைய முடியும். பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) 200,000 புதிய 4ஜி மொபைல் கோபுரங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக தொலைத்தொடர்புத் துறை (DoT), தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது. இதற்காக ஒரு ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் சப்போர்ட் அமைப்பும் உருவாக்கப்படும்.