BSNL அதன் கஸ்டமர்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் மீண்டும் ரூ,1 திட்டம் வந்தாச்சு
ஒரு மிட்டாய் வாங்கும் விலையில் ரீச்சார்ஜ் பிளான் என்பது நமக்கு ஆச்சர்ரியத்தை தருகிறது
வெறும் 1ரூபாயில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் இதன் வேலிடிட்டி முழுசா 1 மாதம்
BSNL Diwali offer (
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் திட்டமாக Diwali Bonanza ரூ,1 யில் வரும் இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது அதாவது ஒரு மிட்டாய் வாங்கும் விலையில் ரீச்சார்ஜ் பிளான் என்பது நமக்கு ஆச்சர்ரியத்தை தருகிறது, அதே போல இந்த திட்டத்தில் வெறும் 1ரூபாயில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் இதன் வேலிடிட்டி முழுசா 1 மாதம் இருக்குகிறது ஆனால் இது ஒரு லிமிடெட் திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தின் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ,1 திட்டம்
பிஎஸ்என்எல் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் BSNL ரூ.1 தீபாவளி ஸ்பெஷல் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு தினமும் 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டமானது ஸ்பெஷல் தீபாவளி சலுகை திட்டமாகும் ஆனால் இந்த திட்டமானது புதிய கஸ்டமர்களுக்கு மட்டும் பொருந்தும் அதாவது நீங்கள் நீண்ட நாட்களாக பிஎஸ்என்எல் சிம்முக்கு மாற நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் இதனுடன் நீங்கள் நீண்ட நாள் வேலிடிட்டி நன்மை கிடைக்கும்.
ஆபர் நன்மை வேலிடிட்டி
இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் அதாவது இந்த திட்டமானது அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை மட்டும் இருக்கும், பிஈஸ்என்எல் கஸ்டமர் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம் மேலும் இந்த தகவலை X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
BSNL சமீபத்தில் நாடு முழுவதும் 4G மொபைல் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி, ஆத்மநிர்பர் பாரத் என்ற தொலைநோக்குப் பார்வையை மேம்படுத்தியுள்ளது” என்று BSNL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் A. ராபர்ட் ஜே. ரவி கூறினார். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4G நெட்வொர்க்கை அனுபவிக்க கஸ்டமர்களுக்கு பெருமையான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் நீங்கள் வெறும் ரூ,1 திட்டத்தில் 30 நாட்கள் ரீச்சார்ஜ் தொல்லை இல்லாமல் இருக்க இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.