affordable BSNL 90 days recharge plan offers Unlimited calls Jio Airtel Vi
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு இப்பொழுது மிக சிறந்த திட்டம் கொண்டு வந்துள்ளது, அதாவது இந்த திட்டத்தின் கீழ் தினமும் 5ரூபாய்க்குள் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா ஆமாங்க அதாவது இந்த திட்டத்தில் தினமும் ரூ,4,90 செலுத்தினால் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங் உட்பட பல நன்மைகள் வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டத்தின் ஆக மொத்தம் வேலிடிட்டி 3 மாதங்களுக்கு இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
அதாவது bsnl அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் X பக்கத்தில் இந்த போஸ்டை செய்துள்ளது அதாவது நீங்கள் 90 நாட்கள் வரை எந்த ரீச்சார்ஜ் தொல்லை இல்லாமல் பயன்படுத்த முடியும் அதாவது நீங்கள் நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் பேச முடியும்
பிஎஸ்என்எல் தனது கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக சலுகைகளை வழங்குவதற்காக தொடர்ந்து புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கூடுதலாக, நிறுவனம் அதன் நெட்வொர்க் விரிவாக்கத்திலும் கவனம் செலுத்துகிறது மற்றும் இதுவரை 65,000 புதிய 4G மொபைல் டவர்களை இயக்கியுள்ளது. இதன் மூலம், பிஎஸ்என்எல் பயனர்கள் சிறந்த நெட்வொர்க் கவரேஜ் மற்றும் கனேக்சனின் பலனைப் பெறலாம் .
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டமானது ரூ,439 யில் வருகிறது இந்த திட்டத்தில் எந்த ஒரு நெட்வோர்க்கிலிருந்தும் எந்த ஒரு லிமிட் இல்லாமல் பேசலாம், இதனுடன் இதில் ரோமிங் நன்மையும் பெற முடியும் அதாவது இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு ப்ரிடித்தவர்களிடம் மணி கணக்கில் பேச முடியும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் 300 SMS நன்மை பெற முடியும் இதை தவிர இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை ஏதும் கிடைக்காது.
இந்தத் திட்டம் பெரும்பாலும் அழைப்பை நம்பியிருக்கும் மற்றும் அதிக தரவு தேவையில்லாத பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் திட்டம் இரட்டை சிம் பயனர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகவும் இருக்கலாம், ஏனெனில் இந்தத் திட்டத்தின் உதவியுடன் அவர்கள் ஒரு நாளைக்கு ரூ.5க்கும் குறைவான கட்டணத்தில் தங்கள் சிம்மை செயலில் வைத்திருக்க முடியும்.
மேலும் நீங்கள் நீண்ட நாட்கள் வரை எந்த ஒரு இடையுறு இல்லாமல் அன்லிமிடெட் காலிங் நன்மை 90 நாட்கள் வேலிடிட்டி பெற முடியும்.
இதையும் படிங்க குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி தினமும் 2GB டேட்டா, காலிங் தரும் BSNL தான் கெத்து மாஸ் பிளான்கள்