BSNL
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு கிறிஸ்மஸ் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது, இந்த திட்டத்தில் வெறும் ரூ,225 யில் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை மற்றும் ரூ,251 யில் வரும் இந்த திட்டத்தில் 100GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் மற்றும் அதிக நாள் வேலிடிட்டி போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளை விரிவாக பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ.225 திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், தினமும் கிறிஸ்மஸ் சலுகையாக 3GB டேட்டா வழங்குகிறது முன்பு இந்த திட்டத்தில் வெறும் 2.5GB டேட்டா மட்டுமே வழங்கியது ஆனால் இப்பொழுது கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இதில் நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும் . மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் அதாவது இதன் நன்மை டிசம்பர் 24 முதல் ஜனவரி 31 வரை மட்டுமே பெற முடியும்
இதையும் படிங்க:மஜாவான ஆபர் VI கஸ்டமர்களுக்கு எக்ஸ்ட்ரா 50GB டேட்டா குஷியில் மக்கள்
BSNL ரூ,251 வரும் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் திட்டமாக அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS வழங்குகிறது இதன் மிக பெரிய ஹைலைட் இந்த திட்டத்தில் 100GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் வரை இருக்கும் அதாவது இந்த திட்டமானது ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் முன்பு இது குழந்தைகள் ஸ்பெஷல் திட்டமாக இருந்தது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தின் நன்மை அனைவரும் பெறலாம் இதன் வேலிடிட்டி டிசம்பர் 24 முதல் ஜனவரி 31 2026 வரை மட்டுமே இருக்கும்