BSNL 4G மற்றும் Q-5G சேவை நாடு முழுவதும் அனைவருக்கும் வந்தாச்சு கூடவே வீடு தேடி சிம் டெலிவரி ஆகும்

Updated on 26-Aug-2025

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நாடு முழுவதும் அதன் நெட்வர்க்கை மேம்படுத்த பல மேலும் நாடு முழுவதும் BSNL யின் 4G சேவையை விரிவுப்படுத்த ரூ, 6,982 கோடி செலவழித்துள்ளது, இது முந்தைய ரூ.3.22 லட்சம் கோடி மதிப்பிலான ஆதரவிற்கு கூடுதலாக வருகிறது, இதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட ரூ.89,000 கோடி மதிப்பிலான 4G மற்றும் 5G ஸ்பெக்ட்ரம் ஆகியவை அடங்கும்.

4G யில் அதிக முன்னேற்றம்.

ஜூலை 2025 இறுதிக்குள் சுமார் 96,300 சைட்ஸ் நடப்பட்டது அதில் நாடு முழுவதும் 91,281 சைட்ஸ் ஏற்கனவே செயலில் இருக்கிறது, அதே போல சமிபத்தில் ஹை ஸ்பீட் டேட்டா காலிங் நன்மையுடன் அதன் 4G சேவையை டெல்லி வட்டாரத்துக்கு கொண்டு வரப்பட்டது

இதில் நாங்கள் தகவல் கூறுவதன் மூலம் டெல்லியில் 4G ரோலவுட் ஒரு நெட்வொர்க் ஷேரிங் அக்ரிமென்ட் உடன் அறிமுகம் செய்யப்பட்டது இதன் மூலம் BSNL அதன் பார்ட்னர் உடன் சைன் செய்துள்ளது

நிதி செயல்பாடு சிறப்பாக செயல்பட்டது

கடந்த நிதியாண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி மற்றும் ரூ.280 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக மாநில தொலைத்தொடர்பு அமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர் மாநிலங்களவையில் தெரிவித்தார் . இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வர இருக்கும் 5G சேவை மற்றும் Q-5G

BSNL அதன் 5G சேவையை தயார் படுத்தம் விதமாக சந்தையில் Q-5G சேவை என்ற பெயரில் என்ட்ரி கொடுத்துள்ளது, அதில் ‘Q’ யின் அர்த்தம் குவாண்டம் ஆகும் மேலும் இது விரைவில் நாடு முழுவதும் அதன் சேவையை விரிப்படுத்தும் மேலும் இது விரைவில் jio மற்றும் ஏர்டெல் உடன் போட்டியிட களத்தில் இறங்கும்.

இதையும் படிங்க:BSNL மெகா சூப்பர் ஆபர் வெறும் ரூ,600க்குள் வரும் திட்டத்தில் 3 மாசத்துக்கு நோ டென்ஷன்

சிம் டெலிவரி

இருப்பினும், BSNL நெட்வொர்க் மேம்படுத்தலில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. இது தவிர, தனியார் நிறுவனங்களைப் போலவே அதன் புதிய ஆன்லைன் போர்டல் மூலம் டோர்ஸ்டெப் சிம் டெலிவரி சேவையை நிறுவனம் வழங்குகிறது. இதன் பொருள், இந்த போர்ட்டலைப் பார்வையிடுவதன் மூலம், நீங்கள் ப்ரீபெய்டு அல்லது போஸ்ட்பெய்டு என எதுவாக இருந்தாலும், உங்கள் வீட்டிலிருந்தே self KYC ஆன்லைன் மூலம் BSNL சிம்மைப் பெறலாம். இது தவிர, ஏர்டெல்லைப் போலவே, நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேம் எதிர்ப்பு பாதுகாப்பை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. இது தவிர, வரும் காலங்களில், BSNL அதன் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மிஷிங் எதிர்ப்பு பாதுகாப்பையும் வழங்க உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :