BSNL, Jio போல இப்பொழுது Airtel இந்த திட்டத்தில் சில பல ஆபர்களை அறிவித்துள்ளது

Updated on 12-Sep-2025
HIGHLIGHTS

BSNL மற்றும் ஜியோ போல Airtel ரூ,400க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

பாரதி ஏர்டெல்லின் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் ஆகும்

இதில் தினமும் 2GB உடன் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது.

இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான BSNL மற்றும் ஜியோ போல Airtel ரூ,400க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது , இதன் மூலம் ஜியோவை போல கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்குகிறது, இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்குகிறது, இருப்பினும் இந்த திட்டம் புதிய திட்டம் இல்லை ஆனால் இதில் தினமும் 2GB உடன் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது.

பாரதி ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல்லின் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தில் கஸ்டமருக்கு அன்லிமிடெட் 5G வழங்குகிறது. இதனுடன், 30 ஜிபி கூகிள் கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளது. ஆனால் அதுமட்டுமல்ல. இந்த திட்டத்துடன் கஸ்டமர்கள் ஆப்பிள் மியூசிக் இலவச சந்தா அக்சஸ் வழங்குகிறது . பின்னர், பெர்ப்ளெக்ஸிட்டி உடனான கூட்டாண்மை காரணமாக, ரூ.379 திட்டத்தில் ஏர்டெல் கஸ்டமர்கள் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ AI சப்ச்க்ரிப்சன் நன்மை பெறலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை வேலிடிட்டி முழுசா ஒரு மாதம் ஆகும் .

அதாவது நீங்கள் இந்த திட்டத்தை எந்த நாளில் ரீசார்ஜ் செய்கிரிகளோ அதே தேதியில் தான் ரீசார்ஜ் அடுத்த மாதம் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்

இந்தத் திட்டம் வழங்கும் நன்மைகள் மற்றும் டேட்டாக்களின் அளவைக் கருத்தில் கொண்டு, தற்போதைய சூழலில் இது மிகவும் விலை உயர்ந்த திட்டத்துடன் இது சிறந்த நன்மைகள் தருவது என்பது எங்கள் கருத்து. ஏர்டெல் நிறுவனம் ஆப்பிள் மியூசிக் மற்றும் கூகிள் ஒன் சந்தாவை பயனர்களுக்கு வழங்கும் பிற ப்ரீபெய்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :