இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,929 ரீச்சார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது மேலும் இந்த திட்டத்தில் முழுசா 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க
Airtel ரூ,929 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், கால்களுக்கு லிமிட் இல்லை. லோக்கல் அல்லது STD என எதுவாக இருந்தாலும், அனைத்தும் அன்லிமிடெட் ஆனது . மேலும், ரோமிங் கால்களும் இலவசம். இதன் பொருள் நீங்கள் பயணம் செய்யும் போது கூட இடையூறு இல்லாமல் பேச முடியும். இந்த பேக் ஒரு நாளைக்கு 100 SMS அனுப்ப உங்களை அனுமதிக்கிறது, கூடுதல் கட்டணம் இல்லாமல் மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியான மெசேஜ்களை அனுபவிக்க உங்களை அனுமதிக்கிறது.
இந்த திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் முழு 90 நாள் வேலிடிட்டியாகும் . இதன் பொருள் நீங்கள் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இன்றைய வாழ்க்கை இன்டர்நெட் இல்லாமல் முழுமையடையாது. இந்த பேக் உங்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அது சோசியல் மீடியா , வீடியோ ஸ்ட்ரீமிங் அல்லது ஆன்லைன் கிளாஸ் என எதுவாக இருந்தாலும் – எல்லாம் சீராக நடக்கும்.
Airtel யின் இந்த பேக்கில் Xstream Play எக்சஸ் வழங்கப்படுகிறது, மேலும் இதில் லைவ் TV மற்றும் OTT கன்டென்ட் பார்க்க முடியும், இதனுடன் ஹெலோ ட்யூன் நன்மையும் கிடைக்கும், நீங்கள் 30 நாட்கள் வரை அமைக்கக்கூடிய இலவச ஹலோ ட்யூன்களையும் பெறுவீர்கள். மேலும், உங்கள் கால்கள் மற்றும் SMS களில் ஸ்பேம் எச்சரிக்கைகளையும் பெறுவீர்கள், இது போலி கால்களை தவிர்க்க உதவும்.
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு ரூ.859க்கு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது திட்டத்தையும் வழங்குகிறது. இந்த காலகட்டத்தில், பயனர்கள் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்பையும், தினமும் 100 இலவச SMS செய்திகளையும் அனுபவிக்க முடியும். டேட்டாவைப் பொறுத்தவரை, ஏர்டெல் இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. இருப்பினும், ஏர்டெல் இலவச ஸ்பேம் எச்சரிக்கைகள், இலவச ஹலோடியூன்ஸ், இலவச ரிவார்ட்ஸ் மினி சந்தா மற்றும் 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி AI ப்ரோவிற்கான இலவச அணுகலையும் வழங்குகிறது.