Airtel 3GB per day Data Pack in Select Circles Launched
நீங்கள் Airtel கஸ்டமராக இருந்தால் அதும் ரூ,40க்குள் அதிக டேட்டா நன்மை வழங்குகிறது அதாவது இந்த திட்டத்தில் அதிகபட்சமாக தினமும் 3GB டேட்டா வழங்குகிறது அதாவது உங்களின் எக்டிவ் டேட்டா பிளான் தீர்ந்துவிட்டால் இந்த திட்டமானது அதிக டேட்டா நன்மையை வழங்கும் இந்த திட்டத்தின் விலையை பற்றி பேசினால், இதன் விலை ரூ,39 மட்டுமே மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்த புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை வெறும் ரூ,39. பொதுவாக, நிறுவனங்கள் இவ்வளவு குறைந்த விலையில் மொத்தமாக 1 ஜிபி அல்லது 2 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகின்றன, ஆனால் ஏர்டெல் இந்த முறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு மட்டும் அல்ல என்பதால், ஒட்டுமொத்தமாக நீங்கள் குறிப்பிடத்தக்க அளவு டேட்டாவைப் பெறுவீர்கள் என்று அர்த்தம்.
பெரும்பாலும், இந்த குறைந்த விலை திட்டங்கள் 24 மணிநேரம் அல்லது ஒரு நாள் மட்டுமே வேலிடிட்டியாகும் , ஆனால் ஏர்டெல்லின் ரூ. 39 திட்டம் 3 நாட்கள் செல்லுபடியாகும். இந்த ரூ. 39 ரீசார்ஜ் திட்டம் 3 நாட்கள் வேலிடிட்டியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அதாவது மூன்று நாட்களுக்கு மொத்தம் 9 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள்.
இதையும் படிங்க JIo பட்டய கிளப்பும் ப்ரோட்பென்ட் சேவையில் பல மடங்கு OTT நன்மை விலை என்ன பாருங்க
வார இறுதி நாட்களில் திரைப்படங்கள் அல்லது வலைத் தொடர்களைப் பார்க்க விரும்பும் பயனர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும். ஆன்லைன் கேமிங்கிற்கு அதிக டேட்டா தேவைப்படுபவர்கள் இந்தத் டேட்டா திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தத் திட்டம் ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ ஆப , ஏர்டெல் தேங்க்ஸ் ஆப அல்லது வெப்சைட்டில் கிடைக்கிறது. ‘டேட்டா பேக்’ பகுதிக்குச் சென்று நீங்கள் இதைச் சரிபார்க்கலாம்.