ஏர்டெல் இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டம்: ஏர்டெல் பல புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டங்களில் Disney + Hotstarக்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு பொருந்தும். இந்த திட்டங்களில் இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது. இதனுடன் டேட்டா மற்றும் அழைப்பு வசதியும் இந்த திட்டங்களில் வழங்கப்படுகிறது.
மூன்று மாதங்களுக்கு இலவச Disney+Hotstar சந்தா திட்டம்
இரண்டு ப்ரீ-பெய்டு ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் வழங்குகிறது, இது 3 மாதங்களுக்கு இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.399 மற்றும் ரூ.839ல் வருகின்றன.
ஏர்டெல்லின் ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ.839 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ஒரு வருட இலவச டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா திட்டம்
மூன்று ப்ரீ-பெய்டு ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் வழங்குகிறது, இது ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. இதில் ரூ.499, ரூ.599 மற்றும் ரூ.3359 திட்டங்களும் அடங்கும்.
ரூ.499 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.599 திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கும்.
ரூ.3359 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இலவச Disney+Hotstar சந்தாவுடன் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்
நான்கு போஸ்ட்பெய்ட் திட்டங்களை ஏர்டெல் வழங்குகிறது, அவை இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகின்றன.
ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டமானது 75 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் அழைப்புகள், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் ஆகியவற்றுடன் வருகிறது.
999 மாத வாடகைத் திட்டம் 1000 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்குகிறது.
1199 திட்டத்தில் 250ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன், தேசிய ரோமிங் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி அழைப்பு வசதியும் வழங்கப்படுகிறது.
1599 திட்டத்தில் 250ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும், உள்ளூர் அழைப்பு, ரோமிங் மற்றும் எஸ்டிடி அழைப்பு வசதியும் உள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.