மாப்பு வச்சிட்டயா ஆப்பு Airtel இனி இந்த கம்மி விலை திட்டம் கிடைக்காது

Updated on 10-Nov-2025
HIGHLIGHTS

Bharti Airtel அதன் டருளி அன்லிமிடெட் வொயிஸ் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது,

இனி உங்களுக்கு கிடைக்காது இப்பொழுது இந்த திட்டத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது

அதன் ஆரம்ப விலை ரூ,199 ஆக வைக்கப்பட்டுள்ளது

Bharti Airtel அதன் டருளி அன்லிமிடெட் வொயிஸ் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது, ரூ,189 யில் வரும் திட்டம் இனி உங்களுக்கு கிடைக்காது இப்பொழுது இந்த திட்டத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், SMS போன்ற பல நன்மை வழங்கி வந்தது ஆனால் இப்பொழுது அதன் டருளி அன்லிமிடெட் திட்டம் உயர்த்தப்பட்டு அதன் ஆரம்ப விலை ரூ,199 ஆக வைக்கப்பட்டுள்ளது இதன் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Airtel Rs 189 Truly Unlimited இனி இருக்காது

ஏர்டெல் ரூ.189 திட்டம் சமீப காலம் வரை கிடைத்தது, ஆனால் இனி இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய முடியாது, அதாவது இந்த திட்டத்தை நீக்கப்பட்டுள்ளது இதன் திட்டத்தின் விலை உயர்த்தி ரூ.199யில் வைக்கப்பட்டுள்ளது அதாவது இனி அதன் ஏர்டெல் திட்டத்தின் ஆரம்ப விலை ரூ.199 ஆக இருக்கும் இது சடேட்டர்ட் திட்டமாக இருக்கும் இந்த திட்டங்கள் முதன்மையாக வொயிஸ் சேவைகளை நம்பியிருந்த பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டன, மேலும் பெரும்பாலான நேரங்களில் டேட்டா பயன்பாட்டை நிறுத்தி வைத்து சேவை செயல்படுத்தலுக்கு குறைந்தபட்ச டேட்டா மட்டுமே தேவைப்பட்டன.

இதையும் படிங்க:Airtel கஸ்டமரை குஷிப்படுத்த வந்த பக்கவான பிளான் இதன் நன்மை பார்த்தால் மனசு குளிர்ந்திடும்

ரூ.189 திட்டம் நிறுத்தப்பட்டதன் மூலம், ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் சலுகைகளை ரூ.199 இல் தொடங்கும் வகையில் எளிமைப்படுத்தியுள்ளது. திருத்தப்பட்ட ட்ரூலி அன்லிமிடெட் திட்டம் பயனர்களுக்கு சிறந்த மதிப்பையும் கூடுதல் டிஜிட்டல் நன்மைகளையும் உறுதி செய்கிறது.

இனி Airtel ரூ.199 தான் டருளி அன்லிமிடெட் திட்டம்

ஏர்டெல் ரூ.199 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் இதனுடன் இதில் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. லிமிட் முடிந்த பிறகு டேட்டா கட்டணம் 50p/MB வசூலிக்கப்படும். ஏர்டெல் ரிவார்ட்களில் ஏர்டெல் ஹெலோடியூன்ஸ் (ஒவ்வொரு 30 நாட்களுக்கும் இலவசமாக ஏதேனும் ஒரு டியூனை அமைக்கவும்) மற்றும் 12 மாதங்களுக்கு ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்ளக்ஸிட்டி ப்ரோ AI சந்தா ஆகியவை அடங்கும். ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு இதன் அடுத்ததாக கட்டமாக இருக்கும் திட்டம் ரூ.219 திட்டமாகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :