Airtel offer 77 days validity recharge plan with unlimited calls Data price under rs 500
Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் எவ்வளவு அதிக விலை கொண்ட திட்டத்தில் கூட இவ்வளவு அதிக வேலிடிட்டி வழங்குவதில்லை அதாவது விலை உயர்ந்த திட்டத்திலும் 28 நாட்கள் வேலிடிட்டி தான் வழங்குகிறது, அதாவது ஜியோவின் ரூ, 500க்குள் இருக்கும் திட்டத்தில் கூட வெறும் 36 நாய்கள் வேலிடிட்டி தான், ஆனால் ஏர்டெலின் 489ரூபாயில் மொத்தம் 77 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை வழங்குகிறது அவை என்ன என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
இந்த ப்ரீபெய்டு திட்டத்தின் விலை ரூ,489. இந்த திட்டத்தின் விலை தினசரி விடிதத்தில் பார்த்தால் ஒரு நாளைக்கு சுமார் ₹6 ஆகும் . எனவே, நீண்ட நாட்கள் வேலிடிட்டி மற்றும் பட்ஜெட்டில் வரம்பற்ற அழைப்பை விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.
இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் 77 நாட்கள் வேலிடிட்டி . இந்த காலகட்டத்தில், பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங்கை பெறுவார்கள். கூடுதலாக, இந்தத் திட்டத்தில் 600 இலவச எஸ்எம்எஸ்களும் அடங்கும், இது மெசேஜ் சிக்கல்களை நீக்குகிறது. டேட்டாவை பொறுத்தவரை, இது 77 நாட்களுக்கு மொத்தம் 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இது பொதுவான உலாவல், சமூக ஊடகங்கள் மற்றும் அத்தியாவசிய ஆன்லைன் பணிகளுக்கு போதுமானது.
இதையும் படிங்க AIrtel இவ்வளவு கம்மி விலையில் விலை உயர்ந்த OTT பேக் நன்மை இதனுடன் அன்லிமிடெட் காலிங் எல்லாமே
இதை தவிர Airtel Xstream Play, இலவச ஹெலோ ட்யூன் மற்றும் ஸ்பேம் அலர்ட் போன்ற நன்மைகள் வழங்குகிறது
ஜியோ ரூ.450 திட்டம் 36 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது, அதாவது மொத்தம் 72 ஜிபி. தினசரி டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும். தகுதியான சந்தாதாரர்கள் ஜியோவின் ட்ரூ 5G சலுகையின் கீழ் அன்லிமிடெட் 5G டேட்டாவை அணுகலாம்,