Airtel Plan
இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,379 யில் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற நன்மையை வழங்குகிறது ஆனால் இந்த திட்டத்தில் முழுசா ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G போன்ற பல நமை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஏர்டெயின் இந்த திட்டம் ரூ,379 யில் வருகிறது, இந்தத் திட்டம் ஒரு மாதம் முழுவதும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள் , தினமும் 100 இலவச SMS மெசேஜ்கள் மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா உடன் (4ஜி கஸ்டமர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 5ஜி கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா) வழங்குகிறது இந்த திட்டம் முழுசா ஒரு மாத வேலிடிட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டம் ஒரு காலண்டர் மாத வேலிடிட்டியுடன் வருகிறது.
உங்களுக்குக் கூடுதல் நன்மைகள் கிடைக்கும் இந்தத் திட்டம் டேட்டா மற்றும் காலிங் வசதிகளை மட்டுமின்றி, வேறு பல நன்மைகளையும் வழங்குகிறது.30GB கூகிள் கிளவுட் ஸ்டோரேஜ், ஆப்பிள் மியூசிக்கிற்கான இலவச அக்சஸ் , இலவச ஹலோடியூன்ஸ், ஸ்பேம் கால் /மெசேஜ் அலர்ட்கள் , Adobe Express Premium 12 மாத அக்சஸ் வழங்குகிறது
தினசரி அதிக அளவு டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, அன்லிமிடெட் இன்டர்நெட் அணுகலை விரும்பும் 5G பயனர்களுக்கு, இந்தத் திட்டம் பணத்திற்கு சிறந்த மதிப்பை வழங்கும்.
ஏர்டெல்லின் இந்த திட்டத்தின் விலை ரூ.399 யில் வருகிறது, இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் காலிங், இந்தத் திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது இதை தவிர தினமும் 100 எஸ்எம்எஸ்-களையும் பெறலாம் .ஏர்டெல்லின் ரூ,399 திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகும். 5ஜி நெட்வொர்க்குகளில் உள்ள கஸ்டமர்களுக்கு தினசரி டேட்டா லிமிட்களை பற்றிக் கவலைப்படாமல் அதிவேக இன்டர்நெட் அனுபவிக்கலாம். இருப்பினும், ஸ்டேன்டர்டான பயன்பாட்டுக் பாலிசி (FUP) பொருந்தும்.