Bharti Airtel அதன் முக்கியமான இண்டர்நேசனல் ரோமிங் (IR) 90 நாட்கள் கொண்ட நீண்ட நாள் வேலிடிட்டி திட்டத்தை மாற்றியுள்ளது, நிறுவனத்தின் இந்த ரூ,5,999 பேக்கின் டேட்டா நன்மையை திருத்தியுள்ளது. இது உலகளவில் பயன்படுத்தப்படலாம். மேம்படுத்தப்பட்ட ஏர்டெல் போஸ்ட்பெய்டு ஐஆர் பேக்கில் இப்போது 20 மடங்கு அதிக அதிவேக டேட்டாவும், நியாயமான பயன்பாட்டுக் கொள்கைக்கு (FUP) உட்பட்ட அன்லிமிடெட் டேட்டாவும் அடங்கும், இது 189 நாடுகளில் தடையற்ற கனேக்சனை உறுதி செய்கிறது. மேலும் இந்த திட்டத்தின் நன்மை என்ன என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.
ஏர்டெல் யின் ரூ,5,999 போஸ்ட்பெய்ட் IR பேக்கை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் டேட்டா 40GB யின் ஹை ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது, இதில் டேட்டா குறையும்போது இதன் ஸ்பீட் 80 Kbps வரை குறைக்கப்படும் இதனுடன் இதில் உங்களுக்கு 900 நிமிடங்கள் வரை அவுட்கொயிங் மற்றும் இன்கம்மிங் கால்கள் வழங்கப்படும் (மேலும் இது லோக்கல் இந்தியா ) இருக்கும் இதனுடன் இதில் 100 இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் SMS வழங்கும் மற்றும் இதில் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் இண்டர்நேசனல் ரோமிங் நன்மை வழங்குகிறது
ஏர்டெல் போஸ்ட்பெய்டு ஐஆர் பேக்கில் விமானத்தில் உள்ள சலுகைகளும் அடங்கும்: 250MB டேட்டா, 100 நிமிட அவுட்கோயிங் கால்கள் மற்றும் 100 அவுட்கோயிங் SMS, இவை அனைத்தும் 24 மணிநேரத்திற்கு வேலிடிட்டி உடன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 சர்வதேச விமான நிறுவனங்களுக்கு பொருந்தும்.
முன்னதாக, இந்த பேக் 2 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்கியது. இந்த திருத்தத்தின் மூலம், ஏர்டெல் அதிவேக டேட்டா உடன் இதில் 40 ஜிபியாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் FUP-க்கு அப்பால் அன்லிமிடெட் பயன்பாடு கிடைக்கிறது, மேலும் இந்த ரோமிங் திட்டத்தின் நன்மை 189 நாடுகளுக்கு பொருந்தும் அதாவது ஒவ்வொரு நாடுக்கும் தனி தனி பேக் எடுக்கும் தொல்லை இனி இல்லை இதேவே போதுமானது.
இதையும் படிங்க:Airtel உடன் கைகோர்த்த Google 100GB வரையிலான இலவசமாக கிடைக்கும் கூகுள் ஸ்டோரேஜ் இலவசம்