இந்தியாவில் 5ஜி வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது
பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வி போன்ற நிறுவனங்களை 5ஜி சோதனையை துவங்க அனுமதி அளித்தது.
ஏர்டெல் 5ஜி 1Gbps டவுன்லோட், 100Mbps அப்லோட் வேகம் வழங்குகிறது
இந்தியாவில் 5ஜி வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது. பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான சோதனையை துவங்கி இருக்கின்றன. டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்திய அரசு 5ஜி ஸ்பெக்ட்ரமை ஒதுக்கீடு செய்ய இருக்கிறது. எனினும், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வி போன்ற நிறுவனங்களை 5ஜி சோதனையை துவங்க அனுமதி அளித்தது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ட்விட்டரில் வெளியாகி இருக்கும் வீடியோவில், ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் 5ஜி 1Gbps டவுன்லோட், 100Mbps அப்லோட் வேகம் வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் எரிக்சன் உபகரணங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் 5ஜி சோதனையை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் குருகிராமில் 3.5GHz பேண்ட் மூலம் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது. ஏர்டெல் 5ஜி சோதனையில் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் டவுன்லோட் வேகம் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.