கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் படமாக்கி வருகிறார். அந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ் – தெலுங்கு – இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
Survey
✅ Thank you for completing the survey!
இந்த நிலையில் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் செப்டம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது. மேலும் பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு படத்தின் டிரைலர் வெளியிடுவார் என நாம் கூறியிருந்தோம். அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது பாடல் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது என தயாரிப்பு நிறுவனம் லைக்கா அறிவித்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile