Xiaomi யின் அடுத்த போன் 200MP + 50MP கொண்ட டூயல் கேமரா கொண்டிருக்கும்.

HIGHLIGHTS

உலகின் முதல் 200 எம்பி கேமரா சென்சாரை அறிமுகம் செய்தது

இந்த ஸ்மார்ட்போன்கள் சியோமி 12 சீரிஸ் என அழைக்கப்பட இருக்கின்றன

புதிய 200 எம்பி கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை சியோமி வெளியிடலாம் என கூறப்படுகிறது

Xiaomi யின் அடுத்த போன் 200MP + 50MP கொண்ட டூயல் கேமரா கொண்டிருக்கும்.

சாம்சங் நிறுவனம் கடந்த வாரம் உலகின் முதல் 200 எம்பி கேமரா சென்சாரை அறிமுகம் செய்தது. இந்த சென்சாரை ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு வழங்கும் பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன. 
 
இந்த ஸ்மார்ட்போன்கள் சியோமி 12 சீரிஸ் என அழைக்கப்பட இருக்கின்றன. சியோமி 12 சீரிசில் ஒரு மாடல் 200 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 50 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங்கின் புதிய 200 எம்பி கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை சியோமி வெளியிடலாம் என கூறப்படுகிறது. சியோமியின் எம் 11 சீரிஸ் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது.

இதுவரை 200 எம்பி சென்சாரை அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம் மட்டுமே என்பதால், சியோமி ஐசோகெல் ஹெச்பி 1 சென்சாரையே பயன்படுத்தும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

மற்றும் நிறுவனத்தின் அடுத்த ஜென் பிளாக்ஷிப் – சியோமி 12 சீரிஸ் தான் என்பதால், அதில் தான் 200 எம்பி + 50 எம்பி கேமராக்கள் இடம்பெறும் என்று நம்புவதே இப்போதைக்கு நல்லது.

அப்போது மிட்-ரேன்ஜ் மற்றும் ஹை-எண்ட் போன்களில்?

மேலும் சியோமி அதன் மிட்-ரேன்ஜ் மற்றும் ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு 108 எம்பி மற்றும் 64 எம்பி சென்சார்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் என்றும் வெளியான அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சியோமி நிறுவனம் 200 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile