சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் சியோமி புதிய ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டிருந்தார். இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் சியோமி நிறுவனம் பல மடங்கு அசுர வளர்ச்சியை அடைந்து இருக்கிறது என்று சொல்லலாம் ஏன் என்றால் சுமார் இந்த இரு மாதங்களிலே பார்த்தால், எத்தனை ஸ்மார்ட்போன்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சியோமி மற்றொரு புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டிருக்கிறது. இந்த டீசரின் படி புதிய ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்பட இருப்பது பற்றிய விவரம் இடம்பெற்றிருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் Mi 9 எஸ்.இ. ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவனம் விரைவில் சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றை அறிவிக்க இருப்பதாகவும் இதில் வெற்றி பெறுவோர் Mi 9 ஸ்மார்ட்போனை வென்றிட முடியும் என சியோமி தெரிவித்துள்ளது.
சியோமியின் மனு குமார் ஜெயின் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் ஆகியோர் ப்ளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரியை சந்தித்ததை மனு குமார் ஜெயின் தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.