Xiaomi இன் டிஸ்பிளே கேமரா தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.

Updated on 29-Aug-2020
HIGHLIGHTS

சியோமி நிறுவனம் தனது அதிநவீன மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்

இரண்டாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது

சியோமி நிறுவனம் தனது அதிநவீன மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து உள்ளது. இது சரியான டிஸ்ப்ளே மற்றும் செல்ஃபி பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என சியோமி தெரிவித்தது.
 
புதிய மூன்றாம் தலைமுறை கேமரா தொழில்நுட்பத்தில் OLED ஸ்கிரீன் முற்றிலும் தெரியாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கென ஸ்கிரீனின் கீழ் இருக்கும் கேமரா பிக்சல்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கின்றன. இவை ஸ்கிரீனில் இருந்து சப்-பிக்சல்களிடையே வெளிச்சத்தை கொண்டு சேர்க்க வழி செய்கின்றன.

https://twitter.com/ShouZiChew/status/1299208948826791936?ref_src=twsrc%5Etfw

முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் சியோமி தனது முதல் தலைமுறை அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. பின் அக்டோபர் மாதத்தில் இரண்டாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது

சியோமியின் மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் வழக்கமான செல்ஃபி கேமராக்களை போன்றே சீராக செயல்படும் திறன் கொண்டுள்ளது. புதிய கேமரா தொழில்நுட்பத்திற்கான உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு வாக்கில் துவங்க இருக்கிறது. இந்த அம்ச ம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :