சீனா போனின் தயாரிப்பாளர் நிறுவனமான Xiaomi நவம்பர் 5 அன்று ஒரு நிகழ்வின் மூலம் பல பொருட்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிகழ்வில், நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட MI நோட் 10 சீரிஸ்களையும் அறிமுகப்படுத்தும். தொடங்குவதற்கு முன்பே, இந்த போனை பற்றி தொடர்ந்து லீக்கள் வெளிவருகின்றன. MI நோட் 10 என்பது நிறுவனத்தின் CC9 Proவின் சர்வதேச வேரியண்ட் என்று கூறப்படுகிறது. இந்த போன் பென்டா லென்ஸ் கேமரா அமைப்புடன் வரும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, இந்த போனின் பின்புறத்தில் ஐந்து கேமராக்கள் இருக்கும்.
அறிமுகத்திற்க்கு முன்பே வெளிவந்தது, Mi Note 10யின் சிறப்பம்சம்.
சியோமியின் வெளியீட்டு நிகழ்வுக்கு முன்பு, மி நோட் 10 இன் அனைத்து அம்சங்களும் ட்விட்டர் பயனரால் பகிரப்பட்டுள்ளன. Mi Note 10 மற்றும் Mi Note 10 Pro இன் அனைத்து அம்சங்களும் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளன.
Xiaomi Mi Note 10 யின் சிறப்பம்சம்.(எதிர்பார்க்கப்படும்.)
இந்த போனில் 6.4 இன்ச் முழு HD +1080p AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது. இந்த போனில் ஸ்னாப்ட்ரகன் 730G ப்ரோசெசருடன் உடன் வருகிறதுமற்றும் இது 6GBரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜில் கிடைக்கிறது.மேலும் இந்த போனில் 108 எம்பி பிரைமரி கேமராவுடன் 5 பின்புற கேமராக்கள் இருக்கும். இது தவிர 32 எம்பி முன் கேமராவும் போனில் வழங்கப்படும். இது தவிர, போனில் ஐஆர் பிளாஸ்டர், NFC மற்றும் ஆடியோ ஜாக் வழங்கப்படும். இந்த போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும்.
Mi Note 10 Pro யின் அம்சம்.
இந்த போனில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 90Hz அப்டேட் வீதத்துடன் இருக்கும். மேலும் இந்த போனில் ஸ்னாப்டிராகன் 855+ ப்ரோசெசர் வழங்கப்படும். இந்த போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும். இந்த போனில் பென்டா கேமரா அமைப்பும் வழங்கப்படும். இந்த போன் 40W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வரும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.