சியோமி சமீபத்தில் தனது Mi Mix வரிசையை அதன் முதல் போல்டப்பில் போனான Mi Mix Fold மூலம் புதுப்பித்தது. நிறுவனம் இப்போது அதன் மிக எதிர்பார்க்கப்பட்ட மி மிக்ஸ் 4 ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் தொடரை மேலும் விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது விரைவில் நுழைய வாய்ப்புள்ளது.
புதிய எம்ஐ மிக்ஸ் 4 விரைவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் பிரிவில் அறிமுகமாகிறது. இது சியோமி நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும். முந்தைய எம்ஐ மிக்ஸ் மாடல்களை போன்றே இந்த ஸ்மார்ட்போனும் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.
இத்துடன் இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இது இன் டிஸ்ப்ளே கேமராவுடன் வெளியாகும் சியோமியின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த மாடலில் குவாட் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீனுக்கு மாற்றாக புல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் வழங்கப்படும்.
எம்ஐ மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங், 108 எம்பி பிரைமரி கேமரா, எம்ஐ12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படலாம்.