XIAOMI யின் BLACK SHARK 2 கேமிங் ஸ்மார்ட்போன் கூலிங் டெக்னோலஜி உடன் அறிமுகம்..

Updated on 27-May-2019
HIGHLIGHTS

ஸ்னாப்டிராகன் 855 சிப்செட், 12 ஜி.பி. ரேம், லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ப்ளாக்ஷிப் ப்ரோசெசர் மற்றும் சென்சிடிவ் AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது

சில வாரங்களாக பல லீக்  மற்றும் ரிபோர்டுக்கு பிறகு Xiaomi  அதன் கேமிங் ஸ்மார்ட்போன் Black Shark 2 இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது . இந்த போன் மற்ற கேமிங்  ஸ்மார்ட்போன்  போல  Razr Phone 2 மற்றும் Asus ROG போனில் போன் போல இருக்கும். Xiaomi Black Shark 2 நிறுவனத்தின்  இது கேமிங் வரிசையில் இது மூன்றவது இடத்தில் இருக்கிறது, இதற்க்கு  முன்பு கடந்த வருடம் Xiaomi Black Shark மற்றும் Black Shark Helo அறிமுகம் செய்தது இந்த ஸ்மார்ட்போன் ப்ளாக்ஷிப் ப்ரோசெசர்  மற்றும் சென்சிடிவ் AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது.

புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, HDR. வசதி, ஸ்னாப்டிராகன் 855 சிப்செட், 12 ஜி.பி. ரேம், லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

Xiaomi Black Shark 2​ சிறப்பம்சங்கள்:

– 6.39 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD . பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சாம்சங் GM1 சென்சார், 0.8μm பிக்சல், f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 1/3.6″ சாம்சங் S5K3M5, f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ், 2x சூம்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 0.9μm பிக்சல், f/2.0
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 Mah . பேட்டரி
– 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

இத்துடன் இன்-டிஸ்ப்ளே பிங்காரப்ரின்ட் சென்சார், சிக்னல் சீராக கிடைக்க X-வடிவத்தில் பிரத்யேக ஆண்டெனா வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் ஆர்.ஜி.பி. லோகோ, டிஸ்ப்ளேவில் பிரெஸ் சென்சிட்டிவ் கண்ட்ரோல்கள், ஏ.ஐ. கேமிங் அனுபவம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2x ஆப்டிக்கல் சூம், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 Mah . பேட்டரி, 27வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை 

இந்தியாவில் பிளாக் ஷார்க் 2, 6ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 39999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மற்றும் டாப் எண்ட் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை49999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதன் முதல் விற்பனை ஜூன் 4 அன்று பிளிப்கார்ட் தளத்தில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :