Xiaomi 17 and Xiaomi 17 Ultra launched
Xiaomi இன்று அதன் Xiaomi 17 மற்றும் Xiaomi 17 Ultra ஆகிய இரண்டு போன்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த போனில் அதன் லேட்டஸ்ட் குவல்கமின் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் வழங்கப்படுகிறது இதில் Xiaomi 17 Ultra யில் 6000Mah பேட்டரியும் மற்றும் Xiaomi 17 யில் 6300Mah பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் முழு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Xiaomi 17 போனின் 12GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,89,999, அதே 12GB + 512 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,99,999 ஆக இருக்கிறது மற்றும் இந்த போனை black மற்றும் venture green கலர் ஆப்ஷனில் வாங்கலாம் மற்றும் நீங்கள் மாதந்திர ரூ,9,999 EMI ஆப்ஷனில் வாங்கலாம் மேலும் இந்த போனை march 13 அன்று Amazon மற்றும் Xiaomi.in யில் வாங்கலாம்
Xiaomi 17 Ultra 16GB+512GB என்ற சிங்கிள் ஸ்டோரேஜ் வகையாக ரூ.1,39,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. EMI மாதத்திற்கு ரூ.14,444 யில் தொடங்குகிறது. SBI கார்டு வைத்திருப்பவர்களுக்கு சாதனத்தில் ரூ.10,000 வரை தள்ளுபடி கிடைக்கும். இது கருப்பு மற்றும் சிவப்பு உட்பட இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. ஆரம்பகால சலுகையின் மூலம் வாங்குபவர்கள் இந்த முதன்மை சாதனத்தை ரூ.1,09,999க்கு வாங்கலாம். இது மார்ச் 18 அன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும்.
இந்த இரு போனும் mi.com, amazon.in, மற்றும் xiaomi ரீடைளர் கடைகளிலிருந்து வாங்கலாம்.
Xiaomi 17 போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.3-இன்ச் கொண்ட 1.5K (2,656×1,220 பிக்சல் ) ரேசளுசன் மற்றும் OLED டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 3,500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது.
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் 3nm Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் ப்ரோசெசருடன் இதில் Adreno GPU மற்றும் Qualcomm AI Engine இதனுடன் இந்த போனில் 16GB of LPDDR5x Ultra RAM, மற்றும் 512GB யின் UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
Xiaomi 17, இது Leica-டியூன் செய்யப்பட்ட மூன்று பின்புற கேமரா செட்டிங்குடன் வருகிறது, இதில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸுடன் 23mm போக்கல் லென்த் அலாக் ஆகியவை அடங்கும். மூன்றாவது கேமரா 102 டிகிரி வ்யூவ் உடன் 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபிக்களைக் கிளிக் செய்வதற்கு, உங்களிடம் 50MP முன் கேமரா இருக்கும் மற்றும் இந்த Xiaomi 17போனில் 6,330mAh பேட்டரி உடன் 100W வயர்ட் மற்றும் 50W வயர்லஸ் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:9,200mAh பேட்டரியுடன் Xiaomi Pad 8 அறிமுகம் அம்சங்கள் விலை தகவல் பாருங்க
Xiaomi 17 Ultra போனில் 6.9-இன்ச் கொண்ட 1.5K LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இந்த போனில் 1,060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் டிராகன் கிறிஸ்டல் க்ளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது மேலும் இந்த போனில் Xiaomi 17 போலவே அதே 3nm Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் ப்ரோசெசர் உடன் Adreno 840 GPU மற்றும் அதே 16GB+512GB ஸ்டோரேஜ் உடன் இந்த போனில் Xiaomi HyperOS ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது.
இப்பொழுது கேமரா அம்சங்களை பற்றி பேசினால் இந்த போனில் ஒளியியலுக்கு, Xiaomi 17 Ultra ஆனது Leica-டியூன் செய்யப்பட்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50MP LOFIC Omnivision 1050L ப்ரைமரி கேமரா மற்றும் 50MP Samsung JN5 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆகியவை அடங்கும். மூன்றாவது கேமராவில் 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது 50MP OV50M முன் கேமராவுடன் வருகிறது.
கடைசியாக பேட்டரி பற்றி பேசுகையில் இந்த போனில் 6,000mAh பேட்டரியுடன் 90W வயர்ட் சார்ஜிங் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது