200MP பெரிஸ்கோப் கேமராவுடன் உலகளவில் Xiaomi 17 சீரிஸ் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

Xiaomi அதன் புதிய Xiaomi 17 சீரிஸின் க்ளோபல் சந்தையில் அறிமுகம் செய்தது

இந்த முறை, சீன நிறுவனம் அதன் வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது

Xiaomi 17 மற்றும் Xiaomi 17 Ultra ஆகிய இரண்டு போனை கொண்டு வரப்பட்டது

Xiaomi அதன் புதிய Xiaomi 17 சீரிஸின் க்ளோபல் சந்தையில் அறிமுகம் செய்தது , இந்த முறை, சீன நிறுவனம் அதன் வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது: Xiaomi 17 மற்றும் Xiaomi 17 Ultra ஆகிய இரண்டு போனை கொண்டு வரப்பட்டது. மேலும் இந்த போனில் குவால்காமின் லேட்டஸ்ட் மற்றும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரல் 5 ப்ரோசெசருடன் வருகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Xiaomi 17 மற்றும் Xiaomi 17 Ultra விலை தகவல்

Xiaomi 17 விலை EUR 999 (தோராயமாக ரூ. 107,000). இந்த போன் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட ஒற்றை வேரியண்டுடன் வருகிறது. இது கருப்பு, நீலம், இளஞ்சிவப்பு மற்றும் பச்சை கலர்களில் கிடைக்கிறது. Xiaomi 17 Ultra விலை EUR 1499 (தோராயமாக ரூ. 160,000). இந்த போன் இந்தியாவில் கருப்பு வேரியண்டில் மட்டுமே வரும். இந்த போன்கள் மார்ச் 11 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்திய விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

Xiaomi 17 Ultra சிறப்பம்சம்.

Xiaomi 17 Ultra 6.9-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 3500 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது மற்றும் LTPO டிஸ்ப்ளே சப்போர்டுடன் வருகிறது. இது நிறுவனத்தின் HyperRGB சப்பிக்சல் அமைப்பையும் சப்போர்ட் செய்கிறது.

இந்த போனில் 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா சென்சார் உள்ளது. இதில் லைட் ஃப்யூஷன் 1050L எனப்படும் 1 இன்ச் பெரிய LOFIC சென்சார் உள்ளது. இந்த போனில் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா உள்ளது. இதனுடன், 75–100 mm மெக்கானிக்கல் ஆப்டிகல் ஜூம் கொண்ட 200 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. டால்பி விஷன் சப்போர்ட் போனில் வழங்கப்படுகிறது. போனின் திக்னஸ் 8.29 mm. இதன் எடை 218 கிராம். போனில் 6000mAh பேட்டரி மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது. இது 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.

இதையும் படிங்க வேற லெவல் ஆபர் ஸ்டைலிஷ் Motorola யின்பிலிப் போனுக்கு இந்த ஒரே அடியாக ரூ,39,001 வரை டிஸ்கவுண்ட்

Xiaomi 17 சிறப்பம்சம்.

இந்த தொலைபேசி 6.3-இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளேவை 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 3,500 nits ஹை ப்ரைட்னாஸ கொண்டுள்ளது. இது HDR10+, HDR விவிட் மற்றும் டால்பி விஷனையும் சப்போர்ட் செய்கிறது . மேலும் இந்த போனில் போனின் திக்னஸ் 8.06mm. இதன் எடை 191 கிராம் இருக்கிறது

இந்த போனில் 50MP ப்ரைமரி சென்சார் உள்ளது, இது லைட் ஃப்யூஷன் 950 சென்சார் வடிவத்தில் உள்ளது. இதனுடன், 50MP அல்ட்ராவைடு கேமரா வழங்கப்படுகிறது. 50MP டெலிஃபோட்டோ லென்ஸும் வழங்கப்படுகிறது. 60mm மிதக்கும் டெலிஃபோட்டோ லென்ஸ் இங்கே வழங்கப்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிர்க்காக, போனில் 50MP முன் கேமரா உள்ளது.

இந்த போன் 6,330mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . நிறுவனம் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் வழங்கியுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :