வாட்ஸ்அப் IOS பீட்டாவில் இந்த வசதியை இனி செய்ய முடியாது

Updated on 03-Jun-2019
HIGHLIGHTS

புதிய மாற்றங்கள் அடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட்டில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் 2.16.60 என அழைக்கப்படுகிறது.

வாட்ஸ்அப் IOS. பீட்டா பதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் 2.16.60.26 பதிப்பின் புதிய மாற்றங்கள் அடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட்டில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் 2.16.60 என அழைக்கப்படுகிறது.

புதிய  IOS. பதிப்பில் வாட்ஸ்அப் பயனர்கள் மற்றவர்களின் ப்ரோஃபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்ய முடியாதது குறி்ப்பிடத்தக்க மாற்றமாக இருக்கும். ஏற்கனவே வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே தற்சமயம் ஐ.ஓ.எஸ். பதிப்பில் இந்த வசதி நீக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி புதிய தோற்றத்தில் போட்டோ ஆல்பம் அதன் மொத்த டவுன்லோடு அளவுடன் இடம்பெற்றிருக்கும். புதிய அப்டேட்டிற்கு பின் பயனர்கள் தங்களது அக்கவுண்ட்டை அழிக்க முற்படும் போது தங்களின் மொபைல் நம்பரை மாற்ற வாட்ஸ்அப் பரிந்துரைக்கிறது. பெரும்பாலான பயனர்கள் புதிய நம்பர் கிடைத்ததும், பழைய அக்கவுண்ட்டை அழிக்க முற்படுவதால் வாட்ஸ்அப் இவ்வாறு செய்கிறது.

புதிய மாற்றங்களுக்கு பயனரின் தனியுரிமை தவிர வேறு ஏதும் காரணம் இருப்பதாக தெரியவில்லை. தற்சமயம் வாட்ஸ்அப் க்ரூப்களில் மற்றவர்களின் ப்ரோஃபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதுதவிர வாட்ஸ்அப் தனது போட்டோ ஆல்பம் தோற்றத்தை உருமாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, வாய்ஸ் மெசேஜ்கள், வாய்ஸ் கால் உள்ளிட்ட அம்சங்களிலும் வாட்ஸ்அப் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. எதிர்கால அப்டேட்களில் இன்டராக்டிவ் பட்டன்களை சேர்க்கவும் டெவலப்பர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் இந்த அம்சம் அனுப்பப்படும் மீடியா அல்லது குறுந்தகவல்களை சார்ந்து இயங்கும் என தெரிகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :