ViVo ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

Updated on 16-Dec-2019
HIGHLIGHTS

ViVo Zப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 12,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ViVo  நிறுவனத்தின் இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் நவிலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டது.

தற்சமயம் ViVo  Zப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 12,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இதன் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டுள்ளது. ViVo Z 1 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ இசட்1 ப்ரோ டாப் எண்ட் மாடலான 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட் மட்டும் விலை குறைக்கப்படாமல் ரூ. 15,990 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய விலை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் ஆண்ட்ராய்டு பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ்., 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் கேமராசென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் 4D கேமிங் அனுபவம் வழங்கப்படுகிறது.

விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.இது கேமின் போக்கிற்கு ஏற்ப ஸ்மார்ட்போனை வைப்ரேட் செய்யும். பிளாஸ்டிக் பேக் மற்றும் கிரேடியண்ட் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :