Vivo பட்ஜெட் விலையில் Vivo Y20G மற்றும் Vivo Y31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.

Updated on 22-Jan-2021
HIGHLIGHTS

Vivo புதிய வை20ஜி மற்றும் வை31 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம்

விவோ வை20ஜி மாடல் அப்சிடியன் பிளாக் மற்றும் பியூரிஸ்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

விவோ நிறுவனத்தின் புதிய வை20ஜி மற்றும் வை31 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் விவோ வை20ஜி மாடலில் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் ஹாலோ ஐவியூ டிஸ்ப்ளே, 13 எம்பி + 2 எம்பி + 2 எம்பி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
 
இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ வை31 ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2408 பிக்சல் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி + 2 எம்பி சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ வை31 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருக்கிறது.

விவோ வை31 மாடலிலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய விவோ வை31 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஓசன் புளூ மற்றும் ரேசிங் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

விவோ வை20ஜி மாடல் அப்சிடியன் பிளாக் மற்றும் பியூரிஸ்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :