Vivo Y19s 5G Launched in India With 6000mAh Battery Price Camera Specs
Vivo நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய Vivo Y19s 5G போனை அறிமுகம் செய்தது மேலும் இந்த போனில் MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் Android 15 அடிபடையின் கீழ் Funtouch OS 15 கீழ் இயங்குகிறது, மேலும் இதில் 6,000 mAh பேட்டரியுடன் 15 W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இதன் விலை மற்றும் சுவாரஸ்யமான அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் கிடைக்கிறது. ஒரு மீடியா அறிக்கையின்படி , 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ ஒய்19எஸ் 5ஜி வேரியண்டின் விலை ரூ.10,999, 4 ஜிபி + 128 ஜிபி ரூ.11,999 மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி ரூ.13,499. விவோ ஒய்19எஸ் 5ஜி டைட்டானியம் சில்வர் மற்றும் மெஜஸ்டிக் கிரீன் கலர்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விவோவின் வெப்சைட் மற்றும் ஆஃப்லைன் ரீடைளர் கடைகள் மூலம் நாட்டில் விற்பனை செய்யப்படும்.
இந்த ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் LCD HD+ திரையை 1,600 x 720 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 90 Hz ரெப்ரஸ் ரெட்டுடன் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 700 நிட்களின் ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது மற்றும் NTSC கலர் ரேஞ்சில் 70 சதவீதத்தை உள்ளடக்கியது. இந்த இரட்டை சிம் ஸ்மார்ட்போன் 6nm MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 15 ஐ இயக்குகிறது. ஸ்மார்ட்போனின் ச்டோரேஜை microSD கார்ட் வழியாக 2TB வரை அதிகரிக்க முடியும்.
Vivo Y19s 5G-யின் இரட்டை பின்புற கேமரா பிரிவில் 13-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 0.8-மெகாபிக்சல் செகண்டரி கேமரா உள்ளது. மேலும் இந்த போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 5-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் Wi-Fi, Bluetooth, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும்.
மேலும் இந்த ஸ்மார்த்போனில் ஸ்மார்ட்போனில் பாதுகாப்புக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட 20 சதவீத பங்கைக் கொண்டு நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. விவோவின் T சீரிஸ் , V60 மற்றும் Y சீரிஸ்கள் மூன்றாம் காலாண்டில் சிறப்பாக செயல்பட்டன.