விவோ எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதுபற்றிய அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகமாகும் என விவோ அறிவித்து இருந்தது.
புதிய விவோ எக்ஸ்70 சீரிஸ் மாடல்களில் ஒரிஜின் ஓ.எஸ். வழங்கப்படும் என விவோ தெரிவித்துள்ளது. டீசர்களின்படி புதிய ஸ்மார்ட்போன்கள் கைனெடிக் வால்பேப்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் எக்ஸ்70 ப்ரோ பிளஸ் கேமரா மாட்யூல் படமும் வெளியாகி இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி விவோ எக்ஸ்70 சீரிஸ் மாடல்களில் 6.5 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்படும் என தெரிகிறது.
அதன்படி இரு ஸ்மார்ட்போன்களும் வி2132ஏ மற்றும் வி2133ஏ எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருக்கின்றன. வி2132ஏ மாடலில் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், வி2133ஏ மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் 3.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்படுகிறது.
வி2132ஏ மாடலில் எக்சைனோஸ் பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. விவோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்70 சீரிசில் - எக்ஸ்70, எக்ஸ்70 ப்ரோ மற்றும் எக்ஸ்70 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் அறிமுகமாகும் என தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை விவோ எக்ஸ்70 மாடலில் 6.58 இன்ச் ஆமோலெட் டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4320 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. வி2132ஏ மாடல் 6 ஜிபி / 8 ஜிபி / 12 ஜிபி ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது..