Vivo V60e
Vivo அதன் V சீரிஸ் வரிசையில் Vivo V60e அறிமுகம் செய்துள்ளது, இந்த செக்மண்டில் விரிவுப்படுத்த இதன் நோக்கமாகும் மேலும் இந்த போனில் MediaTek Dimensity 7360 டர்போ சிப்செட்டுடன் ஆண்ட்ரோய்ட் 15 அடிபடையின் கீழ் FuntouchOS 15 அடிபடையின் கீழ் ஸ்மூத்தாக செயல்படும் மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Vivo V60e: யின் 8GB RAM + 128GB ஸ்டோரேஜின் ஆரம்ப விலை ரூ,29,999 யில் வருகிறது, அதுவே இதன் 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ,31,999 மற்றும் இதன் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,33,999 க்கு இருக்கிறது மேலும் இந்த போன் இரண்டு கலர் விருப்பங்களில் வருகிறது
Vivo V60e ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் குவாட்-வளைந்த AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 2392 × 1080 பிக்சல்கள் ரேசளுசன் , 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன், 1,600 nitsஹை ப்ரைட்னஸ் மற்றும் குறைந்த ப்ளூ லைட் சர்டிபிகேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 7360 Turbo ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது, இது 12GB வரை RAM மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. V60e ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட FuntouchOS 15 யில் இயங்குகிறது.
இதையும் படிங்க கம்மி விலையில் Dolby Atmos மற்றும் 7000mAh பேட்டரி Motorola மட்டும் தான் தர முடியும்
கேமரா செட்டிங் பொறுத்தவரை, V60e ஆனது f/1.88 அப்ரட்ஜர் , OIS சப்போர்ட் மற்றும் 30x ஜூம் கொண்ட 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் ஒரு ஆட்டோஃபோகஸ் கேமரா உள்ளது. இது AI ஃபெஸ்டிவல் போர்ட்ரெய்ட், AI ஃபோர் சீசன்ஸ் போர்ட்ரெய்ட் மற்றும் இமேஜ் எக்ஸ்பாண்டர் அம்சங்களைக் கொண்ட இந்தியாவின் முதல் போநகும் .
இது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,500mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. டைமென்ஷன் 16.353 செ.மீ நீளம், 7.696 செ.மீ அகலம், 0.749 செ.மீ திக்னஸ் மற்றும் 190 கிராம் எடை கொண்டுள்ளது .
கனெக்ஷன் விருப்பங்களில் 5G, ப்ளூடூத் 5.4, Wi-Fi, GPS, NFC, ஒரு IR பிளாஸ்டர் மற்றும் ஒரு டைப்-C 3.0 போர்ட் ஆகியவை அடங்கும். AI கேப்ஷன், AI எரேஸ் 3.0, AI ஸ்மார்ட் கால் அசிஸ்டென்ட் மற்றும் ஜெமினி உள்ளிட்ட AI அம்சங்களின் தொகுப்பையும் விவோ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைபேசி தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 + IP69 என மதிப்பிடப்பட்டுள்ளது.