5000Mah பேட்டரி கொண்ட VIVO U20 நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது.

Updated on 21-Nov-2019
HIGHLIGHTS

நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது

புதிய டீசரின் படி விவோ யு20 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய விவோ ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளVIVO 

புதிய டீசரின் படி விவோ யு20 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. யு.எஸ்.பி. டைப்-சி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது.

புதிய விவோ யு20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. எனினும், 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்படலாம்.  

இந்திய சந்தையில் ரூ. 10,000 முதல் ரூ. 12,000 பட்ஜெட்டில் பெரிய டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று என விவோ தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிய விவோ யு20 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12,000 பட்ஜெட்டில் கிடைக்கும் என உறுதியாகிவிட்டது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :