Vivo இந்தியாவில் அதன் புதிய போனை அறிமுகம் செய்ய இருக்கிறது, இந்த புதிய செக்மண்டின் கீழ் Vivo T5 Pro 5G இந்தியாவின் அறிமுக தேதி உருதி செய்யப்பட்டுள்ளது, இந்த போன் T சீரிஸின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் இந்த போன் Vivo T4 Pro 5G யின் அப்க்ரேட் வெர்சனாகும் மேலும் இந்த போனின் அறிமுக தேதி மற்றும் இதிலிருக்கும் சுவாரஸ்ய அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Vivo தனது புதிய மாடலை ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதிகாரப்பூர்வ தளம் மட்டுமின்றி, விவோ T5 ப்ரோ 5G ஃபிளிப்கார்ட்டிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த மாடலுக்கென ஒரு மைக்ரோசைட் பக்கமும் ஃபிளிப்கார்ட்டில் உருவாக்கப்பட்டுள்ளது, அதில் இந்த மாடல் தொடர்பான அம்சங்கள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த டீசரில், வெள்ளை நிறத் தேர்வில் இந்த போன் காட்டப்பட்டுள்ளது, அதில் செங்குத்தான பின்புற கேமரா மாட்யூல் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க:பறக்கும் அதிரடியாக ஆபர் Motorola யின் இந்த போனில் ரூ,18,000 வரை டிஸ்கவுண்ட்
Vivo T5 Pro 5G ஃபோனில் 1.5K ரெசல்யூஷன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும், இது டிஸ்ப்ளே தரம் மற்றும் கலர்கள் துல்லியமான வெளிப்பாட்டை கணிசமாக அப்டேட் செய்துள்ளது இதை தவிர Vivo T5 Pro 5G போன் உலகின் மிக மெல்லிய போனாக இருக்கும் என கூறப்படுகிறது, இதனுடன் இந்த போனில் பெரிய 9020mAh பேட்டரியுடன் வரும் அதாவது இந்த போன் Oneplus Nord 6க்கு போட்டியாக இருக்கும் என்றால் இந்த போனிலும் அதே போல 9000Mah பேட்டரி வழங்கப்படுகிறது.
இதை தவிர இந்த மாடலில், 120fps வரை சீரான கேமிங் சப்போர்ட் போன்ற, கேமர்களுக்கான சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதன் பொருள், கேமிங்கின் போது ஒவ்வொரு அசைவும் மிகவும் மென்மையாகத் தெரியும். மேலும், பல மணிநேரம் கேமிங் செய்யும் போது போன் அதிக வெப்பமடைவதைத் தடுக்க, இதில் 7000mm வேப்பர் கூலிங் சேம்பர் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த போனில் சிறந்த பர்போமன்சுக்கு மற்றும் ஸ்மூத்தான பயனர் அனுபவத்தை வழங்குவதில் பெயர் பெற்ற ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 ப்ரோசெசர் இயக்கப்படும்