Vivo T4 Ultra launched in India
Vivo இந்திய சந்தையில் அதன் T4 சீரிஸ் விரிவுப்படுத்தியுள்ளது இந்த புதிய சீரிஸ் கீழ் Vivo T4 Ultra ஸ்மார்ட்போன் கொண்டு வந்துள்ளது. அதாவது இந்த புதிய போன் Vivo T3 Ultra அப்க்ரேட் வெர்சனாக இருக்கும் ,மேலும் இந்த போனில் MediaTek Dimensity 9300+ப்ரோசெசர் உடன் 6.67-இன்ச் OLED டிஸ்ப்ளே போன்ற பல அம்சம் இருக்கும் மேலும் இதன் விலை மற்றும் பல சுவாரஸ்ய அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
8GB RAM + 256GB Storage – 37,999 ரூபாய்
12GB RAM + 256GB Storage – 39,999 ரூபாய்
12GB RAM + 512GB Storage – 41,999 ரூபாய்
விவோ டி4 அல்ட்ரா 5ஜி போன் இந்தியாவில் மொத்தம் மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலின் ஆரம்ப விலை ரூ.37,999, இது 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. அதே நேரத்தில், 12 ஜிபி ரேம் கொண்ட 5ஜி போன் ரூ.39,999க்கு வந்துள்ளது, இது 256 ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது.
விவோ டி4 அல்ட்ரா 5ஜி போனின் டாப் வேரியண்ட் 12ஜிபி ரேம் உடன் 512ஜிபி ஸ்டோரேஜை ஆதரிக்கிறது, இதன் வெளியீட்டு விலை ரூ.41,999. இந்த விவோ 5ஜி போனின் விற்பனை ஜூன் 18 முதல் தொடங்கும், இதை மீடியோர் கிரே மற்றும் பீனிக்ஸ் கோல்ட் வண்ணங்களில் வாங்கலாம்.
Vivo T4 Ultra போனில் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில்6.67″ 120Hz AMOLED டிஸ்ப்ளே உடன் இந்த போனில் 2800 × 1260 பிக்சல் ரெசளுசன் உடன் 1.5K டிஸ்ப்ளே வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 2160Hz PWM and HDR10+ சப்போர்ட் வழங்குகிறது
ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 9300+ உடன் G720 GPU உடன் இது 12GB LPDDR5 RAM மற்றும் 512GB UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்குகிறது மேலும் இது Android 15 அடிபடையின் கீழ் Funtouch OS 15 யில் இயங்குகிறது.
இதையும் படிங்க:6000mAh பேட்டரி கொண்ட Samsung யின் இந்த போனில் ரூ.6080 வரை அதிரடி டிஸ்கவுண்ட்
கேமராவை பொறுத்தவரை இந்த போனில் பின்புறத்தில் 50MP OIS மெயின் கேமராவுடன் 50MP Sony IMX 882 பெரிஸ்கோப் சென்சார் உடன் இதில் 8MP அல்ட்ராவைட் கேமரா மற்றும் முன் பக்கத்தில் செல்பிக்கு 32MP 4K மற்றும் EIS கேமரா இருக்கிறது
இதில் பேட்டரி பற்றி பேசினால் 5500mAh பேட்டரியுடன் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இதில் கனேக்டிவிட்டிக்கு dual 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC மற்றும் OTG சப்போர்டுடன் இந்த போனில் இன்டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சாரும் வழங்குகிறது.