Vivo Diwali Offer வெறும் ரூ 101 பயன்படுத்தி நீங்கள் ஸ்மார்ட்போன்கள் வாங்கலாம்.

Updated on 18-Oct-2019

விவோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகை ஆஃப்லைன் சந்தையை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று (அக்டோபர் 18) துவங்கி அக்டோபர் 31 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் விவோ ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது சிறப்பு சலுகைகளை பெற முடியும்.

ஆஃப்லைன் சலுகை விவோ நிறுவனத்தின் வி17 ப்ரோ, வி15 ப்ரோ, இசட்1எக்ஸ் (8 ஜி.பி.), வி15, எஸ்1, வை17, வை15 மற்றும் வை12 போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனுடன் இதில் நோ கோஸ்ட் EMI விருப்பத்தில் மற்றும் ஸிரோ டவுன்  பேமண்ட்  ஸ்கிம் போன்றவை வழங்கப்படுகிறது.

இவைதவிர HDB . பேங்க் சேவைகளை பயன்படுத்தும் போது 10 சதவிகித கேஷ்பேக், HDFC , ICICI பேங்க் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தும் போது 5 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ICICI  குறைந்த பட்ச மாத தவணை ரூ. 926 முதல் துவங்குகிறது.மேலும் நீங்கள் டவுன் பேமன்ட்டிலும்  வாங்கி செல்லலாம்.

வாடிக்கையாளர்கள் ரூ. விவோ-Cashify மேம்படுத்தல் திட்டத்தின் வழியாக விவோ வி 17 ப்ரோ மற்றும் விவோ எஸ் 1 யில்  போனஸ் மதிப்பு 1,999ரூபாய்  வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :