HUAWEI நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களுடன் வியாபாரத்தை தொடரலாம் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
ப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் டிரம்ப் இந்த தகவலை தெரிவித்தார.
HUAWEI நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களுடன் வியாபாரத்தை தொடரலாம் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார். முன்னதாக அமெரிக்க வர்த்தக சபை HUAWEI நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வியாபாரம் செய் தடை விதித்தது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் HUAWEI நிறுவனத்துடனான வியாபார ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.
ஜி20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் க்சி ஜின் பிங் சந்தித்து வர்த்தக விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருநாடுகளிடையேயான வர்த்தக விவகாரம் சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இருதரப்பும் இணைந்து பொருட்களை விற்பனை செய்வது பற்றி சாதகமான முடிவை எட்டின.ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் டிரம்ப் இந்த தகவலை தெரிவித்தார.
கூகுள் நிறுவனம் ஹூவாயுடன் வியாபாரம் செய்துவந்த நிலையில், அந்நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஹூவாய் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஹூவாய் தனது சாதனங்களில் வழங்குவதற்கென சொந்தமாக ஹாங்மெங் ஒ.எஸ். (ஆர்க் ஒ.எஸ்.) உருவாக்கி அதற்கான காப்புரிமைகளை பெற்று வருகிறது.
அதன் படி அமெரிக்க நிறுவனங்கள் HUAWEI நிறுவனத்திற்கு பொருட்களை விற்பனை செய்ய துவங்கலாம். இந்த ஆண்டு மே மாதத்தில் அமெரிக்க வர்த்தக துறை ஹூவாய் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வியாபாரம் செய்ய தடை விதித்ததால் கூகுள், குவால்காம், இன்டெல் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஹூவாய் நிறுவனத்துடனான வியாபார ஒப்பந்தங்களை ரத்து செய்தன
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.