ByteDance நிறுவனம் அதாவது இது TIKTOK செயலுக்கு மிக பாப்புலராக இருந்து வருகிறது, அதன் படி ஒரு அறிக்கையில் வந்த தகவலின் படி ByteDance நிறுவனம் இப்பொழுது ஸ்மார்ட்போனை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.இப்பொழுது ஸ்மார்ட்போனின் மார்க்கெட்டில் Financial Times அறிக்கையின் படி, அதன் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் முன்கூட்டியே சில ஆப்கள் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கும்.
சென்ற ஜனவரி மாதம், சீன போன் உற்பத்தி நிறுவனமான ஸ்மார்டிசனை பைட் டான்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது.
அமெரிக்கா – சீனா இடையில் வர்த்தகப் போர் நடைபெற்று வருவதால், சீனா நிறுவனங்களால் மேற்கத்திய நாடுகளில் வர்த்தகம் செய்வது சிக்கலாக உள்ளது.
சீனாவில் மிகப் பெரிய வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனமாக பைட் டான்ஸ் உள்ளது. இந்தியாவில் பைட் டான்ஸ்-க்கு சொந்தமான டிக்டாக் செயலியை 300 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மக்களில் மத்தியில் TikTok அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்பொழுது TikTok மேல் இருக்கும் தடையை நீக்கியுள்ளது, இதனுடன் இதில் பல டிக்டாக் ஆப்யில் ஆபாச வீடியோக்கள் அதிகளவு பரவுவதால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது, மேலும் இதில் என்னதான் காமடி போன்ற பொழுது போக்கு இருந்தாலும் சிலர் திறமை என்கிற பெயரில் ஆபாசமாக வீடியோக்கள் எடுத்து வெளியிட்டனர். குறிப்பாக, இளம் பெண்களின் கவர்ச்சியான வீடியோக்கள் அதனை தொடர்ந்து இந்த செயலியை முடக்க பட்டு மீண்டும் விடுவிக்கபட்டது அதனை தொடர்ந்து இந்த செயலி அசுரர் வளர்ச்சியில் கொடி கட்டி பறக்குகிறது.
வர்த்தகப் போர் தீர்வுக்கு வந்தபிறகு பைட் டான்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் கவனம் செலுத்தும். அதுவரையில் செயலிகள் வணிகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் எண்ணத்தில் பை டான்ஸ் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
விரைவில் மியூசிக் ஸ்ட்ரீமிங் செயலி ஒன்றை பைட் டான்ஸ் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அதற்க்கான சீரிஸ் மற்றும் டைம்ஸ் மியூசிக் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இப்போது வரை பைட் டான்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்திக் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.